கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டிற்கு 7வது தங்கம்; ஸ்குவாஷ் வீராங்கனை பூஜா ஆர்த்தி அசத்தல்

தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் இருந்தே கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகின்றது. இந்த போட்டி சென்னை, கோவை மதுரை மற்றும் திருச்சியில் நடைபெற்றுவருகின்றது.  இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான ஸ்குவாஷ் போட்டியில் தமிழ்நாடு வீராங்கானை பூஜா ஆர்த்தி மகாராஸ்ட்ரா வீராங்கனையை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் நடப்பு கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு தனது 7வது தங்கத்தினை வென்றுள்ளது. 
கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகள் போல நாட்டின் மற்ற விளையாட்டுகளையும் பிரபலப்படுத்த வேண்டும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஏற்கனவே பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு தற்போது தனது கணக்கில் மேலும் ஒரு தங்கத்தினை வென்று தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கின்றது.  தற்போது தமிழ்நாடு அணி 7 தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று முன்னிலை வகிக்கின்றது. இரண்டாவது இடத்தில் மகாராஸ்ட்ரா அணி உள்ளது. மாகாராஸ்ட்ரா மாநிலம் 4 தங்கம் , 6 சில்வர் மற்றும் 11 வெண்கலம் வென்றுள்ளது. 

Source link