இலவச மனைப்பட்டா வழங்ககோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

இலவச வீடுமனை பட்டா

விழுப்புரம்: விழுப்புரத்தில் இலவச மனைபட்டா வழங்ககோரி விண்ணப்பித்த 370 மாற்றுதிறனாளிகளின் மனுக்களை தவறான காரணங்களை காட்டி நிராகரித்தால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் முற்றுகை

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் 370 பேர் தங்களுக்கு அரசு சார்பில் இலவச மனை பட்டா வழங்ககோரி விண்ணப்பித்திருந்தனர். மாற்றுதிறனாளிகளின் இலவச மனைப்பட்டா தொடர்பான மனுவை அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி நிராகரித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தவறான காரணங்களை காட்டி  தங்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தை

மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை அடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 100 நபர்களுக்கு முதற்கட்டமாக இலவச மனை பட்டா வழங்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர். மாற்றுதிறனாளிகள் கோரிக்கையை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Source link