ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர்… ரோகித் சர்மா, விராட் கோலிக்க இடம்!

 
இந்திய அணி:
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது.
ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமன் செய்து வரலாறு படைத்தது.
 
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டம் மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முஜீப் உர் ரஹ்மான் அணிக்கு திரும்பினார்.
 
டி 20 தொடர்:
இச்சூழலில்,  இந்திய அணிக்கான வீரர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. அதிலும் முக்கியமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெறுவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. காரணம் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை  தொடருக்கு முன்னதாக நடைபெறும் கடைசி டி20 தொடர் இந்தியாவிற்கு இந்த தொடர் தான். அதனால் இதில் இருவரும் இடம் பெற்றால் தான் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. 
ரோகித் – விராட் கோலிக்கு இடம்:
இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த ஓர் ஆண்டுக்கு பின்னர் இடம் பெற்றுள்ளனர். அதன்படி இன்று பிசிசிஐ ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம்: 
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.
 
மேலும் படிக்க: T20 World Cup: டி20 உலகக் கோப்பை… ‘ரோகித் சர்மாவும் விராட் கோலியும்…’ கங்குலியின் ஆசை இதுதான் ! விவரம் உள்ளே!
 
மேலும் படிக்க: Ranji Trophy: டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட புஜாரா? ரஞ்சி கோப்பையில் செய்த சம்பவம்! விவரம் இதோ!

Source link