விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது


Vijay TVK: தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024, திங்கட்கிழமை) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay pic.twitter.com/uLGLvsbVV4
— TVK Vijay (@tvkvijayhq) February 18, 2024

 
கட்சி பெயரை திருத்திய விஜய்:
முன்னதாக, நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரை, தமிழக வெற்றிக் கழகம் என திருத்தம் செய்துள்ளார்.  கடந்த பிப்ரவரி 4ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியான போது, தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியின் பெயரை விஜய் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், தமிழ் இலக்கணப்படி, நிலைமொழியாக வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான “க்” வர வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் சுட்டிக் காட்டினர். சில அரசியல் கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரில், வெற்றி கழகத்திற்கு இடையே ஒற்றெழுத்தான “க்” சேர்த்து ”தமிழக வெற்றிக் கழகம்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 
கட்சியின் பெயரில் இருந்த பிழையை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியதை ஏற்று, விஜய் அதில் திருத்தம் செய்துள்ளார். இதன் மூலம், ஒரு அரசியல்வாதிக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் விமர்சனங்களை ஏற்கும் பண்பை விஜய் நிரூபித்துள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். கட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அற்விப்புகள் வெளியாகி இருந்தாலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பணிகளை மேற்கொள்ளுமாறு நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

மேலும் காண

Source link