ACTP news

Asian Correspondents Team Publisher

மாசி மகம் தீர்த்தவாரி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் நாளை மாசிமகம் தீர்த்தவாரி வைத்திக்குப்பம் கடற்கரை பகுதியில் நடக்கிறது.  புதுச்சேரி மாசிமகம் தீர்த்தவாரியை முன்னிட்டு நாளை புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை உத்தரவு, மேலும் சிபிஎஸ்சி மற்றும் அரசு செய்முறைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என கல்வி துறை தெரிவித்துள்ளது.

மாசிமகம் தீர்த்தவாரி

மாசிமகம் தீர்த்தவாரியையொட்டி மைலம் முருகர், தீவனூர் விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, மணக்குள விநாயகர், வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர், முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் உட்பட  100 க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து உற்சவர்கள் பங்கேற்க உள்ளனர். புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் , காலை 11 மணிக்கு

போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி நகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொது மக்களின் வசதிக்காகவும் நகரின் பிரதான சாலைகளில் நாளை காலை 8 மணி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில், அஜந்தா சந்திப்பில் இருந்து ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பு வரை இருசக்கர வாகனங்களை தவிர மற்ற அனைத்து வித வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. எனவே, காலாப்பட்டில் இருந்து புதுச்சேரிக்கு இசிஆரில் வரும் அனைத்து வகை வாகனங்களும் சிவாஜி சதுக்கம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

புதிய பஸ் நிலையத்திலிருந்து முத்தியால்பேட்டை வழியாக சென்னை இ.சி. ஆரில் செல்லும் பஸ்கள் அனைத்தும் வெங்கடசுப்பா சிலையில் வலதுபுறம் திரும்பி, மறைமலை அடிகள் சாலை வழியாக நெல்லிதோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜிவ் காந்தி சதுக்கம், சிவாஜி சிலை வழியாக சென்னை செல்ல வேண்டும்.

Source link