திருச்சியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டி


திருச்சியில் மதிமுக கட்சி சார்பாக துரை வைகோ போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.
இந்திய நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்குகிறது. இந்த முதல் கட்ட தேர்தலிலே, தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 
இந்நிலையில், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை உறுதி செய்யும் பணியிலும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிகளை உறுதி செய்யும் பணியிலும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக கட்சிக்கு, மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

துரை வைகோ:
இந்நிலையில், மதிமுக கட்சி சார்பில் யாரை களமிறக்குவது தொடர்பாக மதிமுக கட்சி சார்பில் ஆட்சிமன்றக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. 
இக்கூட்டத்தில், துரை வைகோவை போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 
சின்னம் குறித்து பேசிய வைகோ. மதிமுக எந்த சின்னத்தில் போட்டியிடவுள்ளது என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. பம்பரம் சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து உள்ளோம். பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சிதான். பம்பரம் சின்னம் கிடைத்தால், அதில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார்.

Source link