சென்னை கோட்டூர்புரம் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…


சென்னையில் கோட்டூர்புரம், தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. 
கடந்த சில தினங்களாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் சென்னையில் உள்ள 10 மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. இந்நிலையில் இன்று, சென்னையில் உள்ள 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 
கோட்டூர்புரம், தி.நகர், அண்ணாநகர, திருவான்மியூர் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 
இதர மாநிலங்களில் சோதனை:
தமிழ்நாடு மட்டுமன்றி, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சராகவும் உள்ளவ அரவிந்த் கெஜ்ரிவால் மீதும், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு மட்டுமன்றி, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சராகவும் உள்ளவ அரவிந்த் கெஜ்ரிவால் மீதும், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தனக்கு சட்டவிரோதமாக சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கெஜ்ரிவால், “அது எதுவும் செல்லாது. இதுபோன்று, கடந்த காலத்தில் குறிப்பிட்ட காரணத்தை சொல்லாமல் பொதுவாக அனுப்பப்பட்ட நோட்டீஸை செல்லாது என அறிவித்து, அதை நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளன. அரசியல் சதியின் ஒரு பகுதியாக இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது” என குற்றஞ்சாட்டினார்.
நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சி தலைவரான ஹேமந்த் சோரனை தொடர்ந்து தற்போது கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி தரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
இன்னும் சில மாதங்களில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Source link