இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்த வேண்டும் என பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டம்.

ஒரு காலத்தில், உலகம் முழுவதையும் ஐரோப்பியர்கள் ஆண்டு வந்தனர். குறிப்பாக, ஆசிய கண்டத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பின்னர், நடைபெற்ற விடுதலை போராட்டத்தின் விளைவாக பல்வேறு ஆசிய நாடுகள் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்தன.

இலங்கை சுதந்திர தினம்:

அந்த வகையில், இலங்கை சுதந்திரம் பெற்று நேற்றுடன் (4.2.2024) 75ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு – காலி முகத்திடலில் அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங் மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தனே தலைமையில் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. உலகின் பல்வேறு நாடுகளின் தூதர்கள் இதில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.

- Republic Day: குடியரசு தினவிழா: அலங்கார வாகன கலைக் குழுவினருக்கு முதல் இடம் – பரிசுகளை அள்ளிய தமிழ்நாடு

இந்நிலையில், இலங்கையின் 76-வது சுதந்திர தினமான நேற்று பிரித்தானியாவில் கறுப்புக்கொடி ஏந்தி தமிழர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கை தீவின் பல பாகங்களிலும் நடைபெற்றது. ஆனால் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் கறுப்பு தினமாக சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டது. பிரித்தானியாவில் லண்டன் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழர்களுக்கு சர்வதேச மத்தியஸ்தத்துடனான தீர்வை வழங்க ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக இலங்கை தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிகராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இலங்கை தேசியக் கொடிக்கு மேலாக தமிழீழ தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் – Idhayam Serial: அவாய்ட் செய்யும் பாரதி: சாரதாவுக்கு வந்த சந்தேகம், ட்விஸ்ட் கொடுத்த ஆதி – இதயம் சீரியல் இன்று!

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் – DMK-MDMK: "திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது.. எங்கள் சின்னத்தில் போட்டியிடுவோம்" : மதிமுக.