zee tamil karthigai deepam seerial february 26th episode update | Karthigai Deepam: கார்த்திக் மீது பழி.. வெடித்த அண்ணன் தம்பி மோதல்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அருணின் ரிசார்ட்டை ரவுடிகள் அடித்து நொறுக்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அருணுக்கு விஷயம் தெரிய வர அவன் ரிசார்ட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறான், அங்கு பிடிபட்டு கிடந்த ரவுடியை பிடித்து அடித்து விசாரிக்கும்போது கார்த்திக்தான்  பணம் கொடுத்து இப்படி செய்ய சொன்னதாக சொல்ல அருண் அதை நம்ப மறுக்க ரவுடி உண்மையாகவே அவர் தான் இப்படி செய்ய சொன்னார் என்று சொல்கிறான்.
ALSO READ | Maha Shivaratri 2024: ஓம் நமசிவாய! மகா சிவராத்திரி எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? முழு தகவல்
இதனால் ஆவேசமாக வீட்டிற்கு வரும் அருண் கார்த்திக் சட்டையை பிடித்து சண்டைக்கு போக அபிராமி என்னாச்சு என்று கேட்க ரிசார்ட்டை வாங்கிய விஷயத்தை சொல்கிறான், காரத்திக்கு மட்டும் தான் இந்த விஷயம் தெரியும், அவன் பொறாமையில் இப்படி பண்ணி இருக்கான் என்று அவனுடன் சண்டை போட வீட்டில் பெரிய பிரச்சனை வெடிக்கிறது.
அருண் எனக்காக எதுவும் செய்ய மாட்டேங்கிறீங்க, எனக்கு மரியாதை கொடுக்கிறது இல்ல என்று சண்டையிட ஐஸ்வர்யாவும் உடன் சேர்ந்து கொள்கிறாள். அபிராமி கார்த்திக் அப்படி செய்திருக்கமாட்டான் என்று சொல்ல அருண் நீங்க எப்பவும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க என்று கோபப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க 
Ethirneechal : சுயநினைவு இன்றி தர்ஷினி; ஞானம் கேட்ட கேள்வி; அரண்டு போன குணசேகரன்: எதிர்நீச்சலில் இன்று
 

மேலும் காண

Source link