Woman in Arabic-script dress saved from mob in Pakistan lahore


பாகிஸ்தானில் இருக்கும் லாகூர் மாநிலத்தில் பெண் ஒருவர் அரபிய எழுத்துக்கள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்து வந்ததால், இஸ்லாமிய மதத்தை அவமதித்து விட்டதாக கூறி அவர் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kalesh b/w a Woman and Mob: Police interfere in Pakistan over Woman in Lahore’s Ichra wearing a digital print shirt taken into police custody after a mob complained that the shirt had Quranic verses on itpic.twitter.com/lcsRiJVort
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 25, 2024

இஸ்லாமிய மதத்தை பெரும்பாண்மையாக கொண்ட நாடு பாகிஸ்தான். இந்நாட்டில் இஸ்லாமிய மதம் அல்லது புத்தகம் குறித்து அவதூறாக பேசினால் மரண தண்டனை விதிக்கும் வகையில் மதநிந்தனை சட்டம் அமலில் உள்ளது. மேலும், மதத்தை அவமதித்துவிட்டனர் என கூறி அப்பாவி மக்களையும் தாக்கி கொல்லும் கும்பல் தாக்குதல் சம்பவங்களும் பாகிஸ்தானில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
அந்தவகையில், அந்நாட்டின் லாகூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை உணவகத்திற்கு சென்றுள்ளனர். அந்த பெண் அரபிய எழுத்துக்கள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்து சென்றுள்ளார். அந்த ஆடையில் ‘ஹல்வா’ (அழகு அல்லது இனிப்பு வகை என அர்த்தம்) என அச்சிடப்பட்டிருந்தது.   
ஆனால் அந்த பெண் அணிந்திருந்த ஆடையில், இஸ்லாமிய மதபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இருந்ததாக உணவகத்தில் பணிபுரிந்த நபர்கள் தவறுதலாக புரிந்துக்கொண்டுள்ளனர். அப்பெண் இஸ்லாமிய மதத்தை அவமதித்துவிட்டதாக விமர்சித்தனர். இது குறித்து அருகில் இருந்தவர்களுக்கு தெரியவர அந்த உணவகம் முன் நூற்றுக்கணக்கானோர் கும்பலாக திரண்டு அப்பெண்ணை மிரட்டினர். இதனால் அப்பெண் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்.

Pakistani Islamists attack a woman wearing clothing with Arabic text on it, calling it blasphemy. As the police intervene, the crowd can be heard shouting “Only one punishment for blasphemer: Chop their head off.” Nothing new in the ever-rising Islamism in Pakistan.She is being… pic.twitter.com/GoFWVknRzx
— Imtiaz Mahmood (@ImtiazMadmood) February 25, 2024

இஸ்லாமிய மதத்தையும் புத்தகத்தையும் அவமதித்துவிட்டதாக கூறி, அந்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அந்த கும்பல் கோஷங்கள் எழுப்பத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின் அப்பகுதியில் சூழ்ந்த கும்பலிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பெண்ணை அப்பகுதியில் இருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குர்ஆன் புத்தகத்தில் இடம்பெற்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட ஆடையை அணியவில்லை என்றும் இருப்பினும் இந்த சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனறும் அந்த பெண் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
 

மேலும் காண

Source link