Wipro layoffs Hundreds of mid level employees to lose jobs says report


Wipro Layoff: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, 100க்குக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.  
விப்ரோ எடுத்த அதிரடி முடிவு:
குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. 2024ஆம் ஆண்டில் பணிநீக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்கும் என்று நினைத்தால், ஆரம்பமான சில நாட்களிலேயே நிறுவனங்கள் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தொடங்கிவிட்டன. 
இந்த நிலையில்,  இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, 100க்குக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் டாப் 4 ஐடி சேவை நிறுவனங்களில் விப்ரோ மிகக் குறைந்த லாபத்தைக் எட்டியிருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட ஊழியர்கள்:
 டிசம்பர் மாத காலாண்டில், விப்ரோ நிறுவனத்தின் வெறும் மார்ஜின் அளவு 16 சதவீதமாக பதிவு செய்துள்ளது. இந்த மார்ஜின் அளவு டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் எச்சிஎல் நிறுவனங்களை விட குறைவாக உள்ளது. இதனால் பணிநீக்கம் நடவடிக்கையை விப்ரோ நிறுவனம் எடுக்க உள்ளது.
இதுகுறித்து செய்தி தொடர்பாளர் கூறுகையில், ” சந்தை சூழலுக்கு ஏற்ப நிறுவனத்தின் சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற நிறுவனங்களை போலவே, இந்த நிறுவனமும் கொரோனாவுக்கு பிறகு, மந்தநிலையில் இருந்தது.  எனவே, அதனை சீர் செய்யும் நோக்கில், சில நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டியுள்ளது” என்றார். 
இதனை அடுத்து, விப்ரோ நிறுவனம் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிகிறது. கொரோனாவுக்கு பிறகு ஏற்பட்ட வர்த்தக சரிவை சீர்செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் பணிநீக்கம்:
இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே பல்வேறு நிறுவனங்கள் தனது ஊழியர்கள் பணிநீக்கம் செய்துள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 ஆயிரம் ஊரியர்களை பணிநீக்கம் செய்துள்ளதோடு, ஸ்வீக்கி மற்றும் பேடிஎம் நிறுவனம் 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.  குறிப்பாக, ஏஐ தொழில்நுட்பம் ஐடி சேவை நிறுவனங்களில் பெரும் பங்காற்றி வருகிறது. இதனால், பல ஐடி நிறுவனங்கள் செலவு குறைப்பு நடவடிக்கையாக, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க
அடுத்த ரவுண்டு! அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!  400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்விகி! 
ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல்.. யாத்திரையில் விஷமிகள் செய்த காரியம்.. நடந்தது என்ன?

மேலும் காண

Source link