தாமிரபரணி , பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ரத்னம் (Rathnam).
மூன்றாவது முறையாக ஹரி – விஷால் கூட்டணி
விறுவிறுப்பான ஆக்ஷன் படங்களுக்காக பெயர்போனவர் இயக்குநர் ஹரி. சாமி, அருள், ஆறு, வேங்கை, சிங்கம் என இவர் இயக்கிய படங்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. ஹரி – விக்ரம் , ஹரி – சூர்யா ஆகிய கூட்டணியில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இதே வரிசையில் விஷால் – ஹரி கூட்டணியில் வெளியான தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய இரு படங்களும் சிறப்பான வெற்றிபெற்றன. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு விஷால் மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ரத்னம்.
ரத்னம்
கிருஷ்ணா, பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கெளதம் மேனன், யோகிபாபு இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்சு பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
Presenting the blasting action trailer of #Rathnam 🔥 in theatres on APRIL 26TH! Tamil – https://t.co/ICmgSPHpX7Telugu – https://t.co/MvPYH6RQc2 Starring Puratchi Thalapathy @VishalKOfficial. A film by #Hari.A @ThisisDSP musical. @stonebenchers @ZeeStudiosSouth… pic.twitter.com/opKDvARDlR
— Stone Bench (@stonebenchers) April 15, 2024
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியது . தொடர்ந்து ஜூலையில் தொடங்கிய படப்பிடிப்புதூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றது. 2024 ஆண்டு ஜனவரி மாதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டது. இப்படம் விஷால் நடிப்பில் வெளியாகும் 34ஆவது படமாகும்.
மேலும் காண