Virender Sehwag: பயிற்சியாளர், வீரேந்திர சேவாக்கை தாக்கினார்.. நீண்ட நாட்களுக்கு பிறகு சொன்ன ராஜீவ் சுக்லா

வீரேந்திர சேவாக் தனது அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர்.  டெஸ்ட் போட்டிகளில் கூட இந்திய முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் டி20 போட்டிகளில் ஆடுவது போன்று அதிரடியாக விளையாடுவார். பொதுவாக, பேட்ஸ்மேன்கள் ரன்களை வேகமாக எடுக்க வேண்டுமென்று அதிரடியாக பேட்டிங் செய்யும் போது, ​​பெரும்பாலும் தவறான ஷாட்களை ஆடி தங்களது விக்கெட்களை இழப்பார்கள். அதேபோல்தான் வீரேந்திர சேவாக்-கும் அவசரப்பட்டு ஆட்டமிழந்தார். மோசமான ஷாட் ஆடியதற்காக சேவாக் டிரஸ்ஸிங் ரூம்மில் பயிற்சியாளரால் தாக்கப்பட்டார். தற்போது இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ராஜீவ் சுக்லா, ”பயிற்சியாளர் சேவாக் மீது மிகவும் கோபமாக இருந்தார். சேவாக் அவுட்டாகி டிரஸ்ஸிங் ரூம் வந்ததும் பயிற்சியாளர் சட்டையை பிடித்து இழுத்தார். அப்போது, சேவாக் இந்த விஷயத்தை மிகவும் தொழில்முறையாக கையாண்டார்” என்று கூறினார்.

சேவாக் என்ன சொன்னார்..? இந்த சம்பவம் குறித்து..!

"2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜான் ரைட்டால் (இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர்) என்னைத் தள்ளினார். நான் குறைந்த ரன்னில் அவுட் ஆன பிறகு அவர் என் காலரைப் பிடித்து இழுத்தார். நான் மிகவும் கோபமடைந்து (அப்போதைய மேலாளர்) ராஜீவ் சுக்லாவிடம், எப்படி? ஒரு கோச் என்னை அடிக்க முடியுமா? என்று கேள்வி கேட்டேன். அதன் பின்னர் அம்ரித் மாத்தூரும், ராஜீவ் சுக்லாவும் என்னையும் ரைட்டையும் சமாதானம் செய்து வைத்தனர்" என்று முன்னாள் பிசிசிஐ பொது மேலாளர் அம்ரித் மாத்தூரின் "பிட்ச்சைட்: மை லைஃப் இன் இந்திய கிரிக்கெட்" புத்தக வெளியீட்டின் போது வீரேந்திர சேவாக் கூறினார்

நியூசிலாந்து முன்னாள் வீரர் ஜான் ரைட், 2000ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். சவுரவ் கங்குலி தலைமையிலான அணி 2000 மேட்ச் பிக்சிங் ஊழலில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தபோது, ​​2005ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்குப் பயிற்சியாளராக இருந்தார். அவரது நியமனம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஏனெனில், வரலாற்றில் முதல்முறையாக வெளிநாட்டு தலைமை பயிற்சியாளரின் கீழ் இந்தியா செயல்பட்டது. ரைட்டின் கீழ், இந்தியா உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக மாறி, நிறைய வெற்றிகளைப் பெற்றது. மேலும்,  2003 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது.

முதல் பந்திலேயே அதிரடியாக ஆடும் சேவாக்:

சேவாக், பல பேட்ஸ்மேன்களுக்கு முன்னோடியாக தற்போதுவரை இருந்து வருகிறார். இந்திய அணிக்காக தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கும் சேவாக் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து பெயர் பெற்றவர். கிரிக்கெட்டில், வீரர்கள் பெரும்பாலும் புதிய பந்தை ஆட தயங்குவார்கள். அந்த பந்து பழமை ஆனதும்தான் அடிக்க தொடங்குவார்கள். ஆனால் சேவாக் புதிய பந்தையே நையபுடைப்பார். இது தவிர, சேவாக் மைதானத்திலேயே பாடல்கள் பாடும் பழக்கமும் இருந்தது. பேட்டிங் செய்யும்போது மனதை ஒருமுகப்படுத்த பாடல்களை பாடிய வீடியோக்களும் எத்தனையோ வைரலாகி உள்ளது.

சேவாக் சர்வதேச போட்டிகளில் எப்படி..?

இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடிய இந்திய வீரர்களில் சேவாக் ஒருவர். கடந்த 1999 முதல் 2013 வரை இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். இதில், சேவாக் 104 டெஸ்ட், 251 ஒருநாள் மற்றும் 19 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி, டெஸ்டில் 180 இன்னிங்ஸ்களில், அவர் 49.34 சராசரியில் 8586 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 245 இன்னிங்ஸில் 8273 ரன்களையும், டி20யில் 18 இன்னிங்ஸில் 394 ரன்களையும் எடுத்துள்ளார்.

Source link