இந்தியா – ஆப்கானிஸ்தான்:
இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகளை கொண்ட டி 20 தொடர் இன்று மொஹாலியில் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டி இந்தூரிலும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெறுகிறது.
அந்த வகையில் ஜூன் மாதம் தொடங்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக இந்த தொடர் இருக்கும். இதனை அடுத்து இந்திய அணிக்கு எந்தவொரு டி 20 தொடர்களிலும் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி விளையாடவில்லை. அதனால், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டி 20 தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. இதில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றனர். அந்த வகையில் கடந்த 14 மாதங்களுக்கு பிறவரும் ரோகித் மற்றும் விராட் கோலி இருவரும் விளையாட உள்ளனர் என்று ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
விராட் கோலி விலகல்:
இந்நிலையில் தான் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்திய அணியின் ரன் மிஷின் என்று அழைக்கப்படக்கூடிய விராட் கோலி இன்று நடைபெறும் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் பேசுகையில், “ இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் போட்டியில் விளையாட மாட்டார். அதேநேரம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுவர்கள்” என்று கூறியுள்ளார். அதேபோல், விராட் கோலி இடத்தில் சுப்மன் கில்லை களம் இறக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் காயம் காரணமாக விலகியுள்ளனர். அதேபோல், ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அக்சர் படேல், முகேஷ் குமார், ஆவேஷ் கான் ஆகியோர் டி 20 இந்திய அணியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல். ரவி பிஷ்வோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் அவேஷ் கான்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி:
இப்ராகிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரதுல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனாத், அஸ்மத்துல்லா, ஷர்ஃபுல்லாஹ் உமர், ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஃபரித் அகமது, நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்பாடின் நைப் மற்றும் ரஷித் கான்.
மேலும் படிக்க: SA20: இன்று தொடங்கும் தென்னாப்பிரிக்கா T20 லீக்..இரண்டாவது சீசன் பற்றிய A to Z தகவல்கள் இதோ!
மேலும் படிக்க: IND vs AFG: “ரோஹித்சர்மா பெரிய சாதனை படைக்க வாய்ப்பு” இன்னும் 5 சிக்ஸர்கள் அடித்தால் இவர்தான் முதல் கேப்டன்!