முதல் இன்னிங்ஸ்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் 246 ரன்களில் சுருண்டது. இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.
காலில் விழுந்து வணங்கிய கோலி ரசிகர்:
பின்னர், இந்திய அணி களமிறங்கியது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெஸ்வால் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினார்கள். அப்போது, கேப்டன் ரோகித் சர்மா இன்னிங்ஸை ஆரம்பிப்பதற்காக களத்தில் நின்றிருந்த போது, மைதானத்தில் இருந்து விராட் கோலியின் 18 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பை தாண்டி களத்திற்குள் நுழைந்தார். இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை நோக்கி களத்திற்குள் ஒடிவந்த அவர் திடீரென ரோகித் சர்மாவின் காலில் விழுந்து வணங்கினார்.
A fan touched the feet of Rohit Sharma.- Rohit, crowd favourite ⭐pic.twitter.com/P2pYyCfw57
— Johns. (@CricCrazyJohns) January 25, 2024
இதனை எதிர்பார்க்காத ரோகித் சர்மா என்ன செய்வது என்று தெரியாமல் சில வினாடிகள் அப்படியே நின்றார். அதன் பின்னர், மைதானத்தில் இருந்த பாதுகாப்பு ஊழியர் வேகமாக ஓடிவந்து அத்துமீறி நுழைந்த நபரை களத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றார்.
A fan touching the feet of Rohit Sharma. [RevSportz]- Rohit is an emotion. pic.twitter.com/cmwzr56idQ
— Johns. (@CricCrazyJohns) January 25, 2024
தற்போது இது தொடர்பான வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதனைப்பார்த்த ரசிகர் ஒருவர், ‘’எல்லோருக்கும் மிகவும் பிடித்த கேப்டன் ரோகித் சர்மா’’ என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதேபோல் மற்றொரு ரசிகர், “விராட் கோலியின் ரசிகர்களாக நாங்கள் இருந்தாலும் எப்போதும் ரோகித் சர்மாவின் மீது ஒரு மரியாதை வைத்துள்ளோம். அதற்கு சான்று தான் இந்த வீடியோ” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: IND VS ENG 1ST TEST: சுழலில் மாயாஜாலம் காட்டிய அஸ்வின் – ஜடேஜா… 246 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணி!
மேலும் படிக்க: Yashasvi Jaiswal: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்… அதிரடியாக அரைசதம் விளாசிய ஜெஸ்வால்!