Villupuram news women molested and killed gingee hill fort has been sentenced to life imprisonment – TNN | செஞ்சி மலைக்கோட்டையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை


விழுப்புரம்: செஞ்சி மலைக்கோட்டை பகுதியில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து  விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெண் கொலை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டை பகுதியில் கடந்த 23.7.2016 அன்று ஒரு பெண், கொலை செய்யப்பட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து செஞ்சிக்கோட்டையின் நினைவு சின்ன உதவியாளரான ராஜேந்திரன் என்பவர், செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண், கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ரிஹானாபர்வீன் (வயது 27) என்பதும், இவரும் புதுச்சேரி ஜெயகணேஷ் நகர் களத்துமேடு பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் விஜி (34) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததும், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரிஹானாபர்வீனை விஜி, செஞ்சி மலைக்கோட்டை பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து பெரிய கருங்கல்லால் அவரது தலையில் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.  இதையடுத்து விஜியை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
வாலிபருக்கு ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட விஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட விஜி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.

மேலும் காண

Source link