Vikravandi DMK MLA Pugazhenthi dies with 21 gunshots and burial with state honors


Pugazhenthi MLA: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மரணம்..
விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்த 71 வயதான புகழேந்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பிற்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர். சிகிச்சை பெற்று நேற்றைய முன்தினம் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம்  (05-04-24) விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட புகழேந்தி மேடையிலேயே மயக்கம் அடைந்தார் உடனடியாக  அருகிலுள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை புகழேந்தி உயிரிழந்தார்.
கடந்த 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த புகழேந்தி. 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் கிளை செயலாளர் பதவியில் இருந்து படிப்படியாக உயர்ந்து மாவட்ட செயலாளராக பணியாற்றினார்.
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
புகழேந்தியின் உடல் அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதி கிராமத்தில் உள்ள இல்லத்தில் நேற்று இரவு முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இரவு முதல் பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது இறுதி ஊர்வளத்தில் அமைச்சர் பொன்முடி, கொளதமசிகாமணி, ரவிக்குமார். சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன்  ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  புகழேந்தியின் உடல் வீட்டின் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. புகழேந்தியின் உடலுக்கு அவரது மகன் செல்வகுமார் உறுதி சடங்குகளை செய்தார்.
முதல்வர் நேரில் அஞ்சலி 
முன்னதாக, அவரது உடல் பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் அஞ்சலிக்காக விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலையத்தில் வைக்கப்பட்டது. காலை முதல் அவருடைய உடலுக்கு ஏராளமான பொதுமக்களும், திமுகவினரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். அமைச்சர்கள் பொன்முடி. எம்ஆர்கே பன்னீர்செல்வம். கேஎன்.நேரு. சிவி.கணேசன் ஆகியோரும் புகழேந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து புகழேந்தியின் உடல் அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 
புகழேந்தி மறைவு – கண்கலங்கிய அதிமுக சி.வி சண்முகம்
புகழேந்தியின் சொந்த ஊரான அத்தியூர் திருவாதிகள் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து  முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் அத்தியூர் திருவாதி கிராமத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கும் சி.வி.சண்முகம்  ஆறுதல் கூறினார். அவருடன் நகர் செயலாளர் பசுபதி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
உடன்பிறவா தம்பியை இழந்து தவிக்கிறேன்
அமைச்சர் பொன்முடி தனது உடன்பிறாவா தம்பியான புகழேந்தி உயிரிழந்தது கட்சிக்கு மட்டுமல்ல எனது குடும்பத்தில் ஒருவராக இருந்த அவர் உயிரிழந்து இருப்பது மிகப்பெரிய துயரத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. எப்பொழுதும் அண்ணா அண்ணா என்று நான் அழைக்கும் போதெல்லாம் ஓடோடி வந்தவர். கிளைக்கழக செயலாளராகவும் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், மாவட்ட அவைத்தலைவர் மாவட்ட செயலாளர் என கழகத்தில் படிப்படியாக வளர்ந்தவர் உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்துள்ளது தமிழக முதல்வருக்கும் கழகத்திற்கும் ஈடு செய்யமுடியாத இழப்பாக அமைந்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்வியுற்றாலும் தோல்வி கண்டு துயலாதவராகவும் கழகத்தினரை தன்குடும்பமாக நினைத்து அன்பாக பழககூடியவர் இழந்திருப்பது பெரும்துயரத்தை ஏற்படுத்தியுள்ளதால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். புகழேந்தியின் உடல் அவரது சொந்த கிராமமான அத்தியூர் திருவாதியில் நாளை மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். கலைஞர் அறிவாலயத்தில் புகழேந்தியின் உடல் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி கெளதமசிகாமணி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

மேலும் காண

Source link