அதிமுக ஆட்சி மீண்டும் அமைத்த பின்பு, ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்காக நான்கு கிராம் தங்கம் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. ஆலங்குடி தொகுதி அதிமுக சார்பில் வம்பன் நால்ரோடு என்ற இடத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: திமுகவின் மீது பொதுமக்கள் ஒருவித எதிர்ப்பு தன்மையோடு தற்பொழுது இருந்து கொண்டிருக்கிறார்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்க்கு பின்னால், யார் இந்த கட்சியை வழி நடத்துவார்கள் எல்லோருடைய மனதிலும் கேள்வி எழுந்த பொழுது, ஜெயலலிதா வந்தார்கள். அவர் மறைவிற்குப் பிறகு யார் இந்த இயக்கத்தை வழிநடத்துவார்கள் என்ற பொழுது, ஓர் சாதாரண ஏழை தொண்டனாக கடைக்கோடி தொண்டனாக இருந்த ஓர் எளிய தொண்டராக இருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக நடத்துகிறார். மூன்றாவது தலைமுறையாக இந்த இயக்கத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
திமுகவைப் போல, கருணாநிதி, அதன்பின் ஸ்டாலின், அதற்குப்பின் உதயநிதி, உதயநிதிக்கு பின்பு இன்பநிதி, இதுபோல் பட்டா போட்டு கொடுக்கும் கட்சி அதிமுக கிடையாது. ஆனால் தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதிமுக என்பது எம்ஜிஆரின் துவக்கப்பட்ட கட்சி. எம்ஜிஆர் கூறும் பொழுது, எனக்கு பின்னாடி யாரோ ஒரு ராமச்சந்திரன் இந்த இயக்கத்தை நடத்துவார் என்று எம்ஜிஆர் சொன்னார்கள். எம்ஜிஆர்க்கு பின்னர் ஜெயலலிதா சொன்னார்கள். எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் அதிமுக கட்சி இருக்கும் ஆட்சியும் இருக்கும் என சொன்னார்கள்.
அதே நேரத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னாலே ஏழை விவசாயி இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அதிமுக முதலமைச்சராக சிறப்பாக ஆட்சியை புரிந்தார்கள. மீண்டும் அவர்தான் ஆட்சிக்கு வருவார்கள்.
அதேபோல் எடப்பாடி கூறுகிறார் எனக்கு பின்னாடி யாரோ ஓர் பழனிச்சாமி வருவார்கள் என்றும். இதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். உங்களை நேசிக்கின்ற தாய்மார்களை நேசிக்கின்ற தலைவராக இருக்கிறார். மிக்ஸி கிரைண்டர் ஃபேன் வேண்டும் என்று என்றாவது சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளீர்களா?
ஒரு வீட்டில் உள்ள ஏழை பெண்ணுக்கு திருமணம் என்றால் 50 ஆயிரம் ரூபாய் பணம் 4 கிராம் தங்கம் ஆகியவற்றை கொடுத்தார்கள். அதேபோல் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவமனையில் இலவச பெட்டகம் கொடுக்கப்பட்டது. ஆனால் இவர்கள் அதனை தடுத்து விட்டார்கள்.
அதேபோல் நோட்டு புத்தகம் பேனா பென்சில் லேப்டாப் சைக்கிள் கொடுத்தார்கள். ஆனால் எந்தவித கண்டிஷனும் போடவில்லை.
ஆனால் இன்று ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னவர்கள் அனைத்து குடும்ப தலைவிக்கும் கொடுக்காமல் தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே கொடுத்துள்ளனர். ஏன் இந்த பாகுபாடு? அந்த ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு ஆயிரம் கண்டிஷன் போடுகின்றனர்.
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
முதல்வராக சித்ராமையாவும் துணை முதல்வராக சிவகுமாரும் தற்போது உள்ளனர். அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் 2000 ரூபாய் கொடுக்கிறோம் என கூறினார்கள். அதேபோல் ஆட்சிக்கு வந்தார்கள் தற்பொழுது அனைத்து மகளிருக்கும் 2000 ரூபாய் கொடுக்கின்றனர். அதுவும் பதவி ஏற்ற ஒரே மாதத்தில். ஆனால் இவர்கள் 27 மாதங்களாக தரவில்லை தற்பொழுது தான் கொடுக்கின்றனர்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து தற்போது தான் பணம் கொடுக்கின்றனர். ஆகவே திமுகவினர் சட்டையை பிடித்து எங்கே எங்களது 27 ஆயிரம் ரூபாய் என பொதுமக்கள் கேட்க வேண்டும்.
டாஸ்மாக்கில் விலை ஏற்றப்பட்டு அந்த பணம் மூலமாக தான் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது.
ஏழை வீட்டில் திருமணம் நடக்கும் பொழுது திமுக ஆட்சியில் எவ்வித பணமும் வராது நகையும் வராது. அதே நேரத்தில் அதிமுக ஆட்சி வந்த பிறகு வீட்டிற்கு பணமும் நகையும் வந்து சேரும். எடப்பாடி பழனிசாமி வருவார் கொடுப்பார். நேற்று கூட எடப்பாடி யாரிடம் சொன்னேன் அண்ணன் நீங்கள் மீண்டும் முதலமைச்சராக வருவீங்க ஏழைகளுக்கு திருமணத்திற்கு 50,000 ரூபாய் பணமும் ஒரு பவுன் தங்கம் கொடுக்க வேண்டும் என கூறினேன். அவர்களும் பொதுமக்களிடம் நன்கு கூறுங்கள் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு கட்டாயம் கொடுப்போம் என கூறினார்கள்.
அது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு 50,000 ஒரு பவுன் தங்கம் லேப்டாப் கொடுப்போம். புதுக்கோட்டை மாவட்டம் தஞ்சாவூர் சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு காவிரி கொள்ளிடம் உபரி நீர் வாய்க்கால் வெட்டி தண்ணீரும் கொடுப்போம் என கூறினார்கள். அதே நேரத்தில் இந்த ஆட்சியில் ஏதாவது நடக்கிறதா?
தாலிக்கு தங்கம் 50 ஆயிரம் ரூபாய் மட்டும் அல்ல அது அம்மா கொடுக்கப்பட்ட ஆட்டு திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது கறவை மாடு கொடுத்தார்கள் அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது அம்மா பிள்ளைக்கு லேப்டாப் கொடுத்தார்கள் அது நிறுத்தப்பட்டுள்ளது
இலவசமாக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அது மட்டும் ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆனால் மின்சார விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
அம்மா மெடிக்கல் நிறுத்தப்பட்டுள்ளது. அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் அம்மா ஸ்கூட்டி கொடுத்தார்கள் அதுவும் நின்னு போச்சு. அனைத்துமே நின்று விட்டது.
அதேபோல் பிரசவத் தொகை 18000 அதுவும் இன்று விட்டது. ஆகவே இந்த ஆட்சி இன்னும் தொடர வேண்டுமா என நீங்களே கூறுங்கள் அல்லது வைகோ போல் தோலில் துண்டு போட்டு பேச முடியுமா?
திமுக ஆட்சியில் கெடுத்தது பின்னர் திமுக தான் கொடுத்தது என பேசுவார் அவர் போல் நாம் மாறி மாறி பேச முடியாது.
இவ்வளவையும் நிப்பாட்டி விட்டு கொடுக்க வேண்டிய ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் கொடுத்தால் என்ன?
பணம் பெற முடியாத ஒருவர் செல்போனுக்கு மெசேஜ் வருகிறது நீங்கள் கார் வைத்துள்ளதால் உங்களுக்கு பணம் கிடையாது என்று. உடனே அவர்கள் நேரில் சென்று பணம் வேண்டாம். காரை கொடுங்கள் என கேட்டுள்ளனர் அதேபோல் நீங்கள் அரசு ஊழியர்கள் உங்களுக்கு பணம் கிடைக்காது என மெசேஜ் வருகிறது. அவர் நேரே சென்று எனக்கு ஆயிரம் ரூபாய் வேணும் அரசாங்க வேலை கொடுங்கள் எனக்கு கேட்கின்றனர்..
இந்த ஆயிரம் ரூபாய் உங்கள் கைக்கு வருவதற்கு முன்பாகவே மூன்று கிலோ தக்காளி ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஒரு காலத்தில் இப்போது திமுக முதலமைச்சராக உள்ள மு க ஸ்டாலின் மின்சார விலை ஏற்றப்பட்டுள்ளது என கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தார். அவருடைய சகோதரி கனிமொழி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வருவோம் என கூறினார்கள். ஆனால் யாரையுமே காணவில்லை. திருமுருகன் காந்தி எங்கே சமூக ஆர்வலர்கள் எங்கே அதிமுக ஆட்சியில் போராட்டம் செய்து கொண்டவர்கள் எங்கே யாரையும் காணவில்லை.
ஆசிரியர் ஆசிரியைகள் தற்போது எம்பி நொந்து உள்ளனர். ஆட்சிக்கு வருவது முன் கூறப்பட்ட எதுவும் தற்பொழுது நிறைவேற்றப்படவில்லை என்ன பேசினார். இந்த ஆட்சியில் சத்துணவு ஆயம்மா காவல்துறையினரிடம் இந்த ஆட்சியை பொறித்து கேளுங்கள் தள்ளி விடுவார்கள்.
இதற்கு மேலாக இந்த பகுதியை சேர்ந்த திமுக காரனை பார்த்து இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்று கேட்டு பாருங்கள் அவர் உங்களுக்கு டீ வாங்கி கொடுத்து இந்த ஆட்சியை பற்றி கூறுவார். இதான் நிலைமை பஞ்சாயத்துக்கு நிதியில்லை ஒன்றிய குழுவுக்கு நிதியில்லை.
அதே நேரத்தில் இப்பகுதியில் ஒரு விபத்து நடந்தால் அவரை உடனடியாக 10 கிலோமீட்டர் உள்ள புதுக்கோட்டைக்கு சென்றால் 350 கோடியில் 11 மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் சேர்த்து சேர்க்கலாம். அதனை கொடுத்தது அதிமுக ஆட்சி அருகில் கட்டப்படும் பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டது அதிமுக ஆட்சி. சாலைகளை மேம்படுத்தியது அதிமுக ஆட்சி. காவிரி குண்டாறு வைகை உபரி நீர் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக ஆட்சி. இவ்வளவு நன்மைகளை செய்தோம்.
தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள அனைத்து நலத்திட்டங்களும் மீண்டும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும். ஆகவே வருகின்ற தேர்தலில் எந்த தேர்வு பொதுமக்களின் பாதங்களை தொட்டு வணங்கி கேட்கிறேன். அதிமுக எம் ஜி ஆர் கொடுத்த கட்சி தான் கொடுத்து கொடுத்து சிவந்த கரத்தை உடையவர் எம்ஜிஆர்.
அதிமுக கட்சி மக்களுக்கு கொடுத்த கட்சி இரட்டை இலை கட்சி. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வருவார். ஜெயலலிதா ஆட்சி அதிமுக ஆட்சி நிச்சயமாக கொடுப்பார். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.