vijay tv siragadikka aasai serial 18th to 23rd promo | Siragadikka Aasai Serial:முத்துவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மீனா


சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. 
முத்து மீனாவிடம் ”சரி இவ்ளோ அழகா ரெடி ஆகி எங்க போற” என கேட்கிறார். அதற்கு மீனா ”கோயிலுக்கு” என பதில் சொல்கிறார். அங்கே முத்துவின் ஃப்ரண்ட் செல்வம் நிற்கிறார். ”டேய் செல்வம் நீ என்னடா இங்க” என முத்து கேட்கிறார். ”இந்த கார் உன் ஃப்ரண்டுக்கு பார்க்க சொன்னியே அந்த மாதிரியே இருக்குல்ல” என்கிறார் முத்து.
”அதே கார்தாண்டா” என செல்வம் பதில் சொல்கிறார். பின்னர் ஐயர் காருக்கு பூஜை செய்து விட்டு சாவியை மீனாவிடம் கொடுக்கிறார். ”அந்த கார் சாவியை எதுக்கு உன்கிட்ட கொடுக்குறாரு” என முத்து கேட்கிறார். ”இந்த காரை உனக்காக உன் ஒய்ஃப் தான் வாங்கி இருக்காங்க” என செல்வம் சொல்கிறார். பின் முத்துவும் மீனாவும் காரில் செல்கின்றனர். இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது. 
சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடில் ரோகினியின் பார்லருக்கு பெயர் மாற்றிய விஷயம் வீட்டில் தெரிந்து விட்டது. ஆனால் விஜயா இதற்கு பெரிதாக ரியாக்ட் செய்யாமல் கூலாக ஹேண்டில் செய்கிறார். இதை பார்த்து மீனா, ”என்னங்க அத்தை டென்ஷன் ஆவாங்கனு நெனச்சா இவ்ளோ பெருந்தன்மையா எடுத்துக்கிட்டாங்க” என சொல்கிறார். அண்ணாமலையும் முத்துவும், விஜயாவின் கூலான பதிலைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பின் ரோகினி விஜயா தனியே இருக்கும் போது அவரை சந்தித்து ”வருத்தமா இருக்கிங்களா அத்தை” என கேட்கிறார். அதற்கு விஜயா, ”இல்ல கோவமா இருக்கேன்” என டெரராக பதில் சொல்கிறார். பின் ”நீ எப்டி என்கிட்ட கேட்காம பேரை மாத்துவ” என கேட்கிறார் விஜயா. பின் ”நீ வீடு வீடா போய் மசாஜ் பண்ணிக்கிட்டு இருந்த சரி நீ ஆசைப் பட்டியேனு உனக்கு வீட்டு பத்திரத்த அடமானம் வச்சி பார்லர் வச்சி கொடுத்தேன், ஆனா நீ என்ன கேட்காம நீ எப்டி பேரை மாத்துவ” என கேட்கிறார். விஜயா ஆக்ரோஷமாக பேசுவதை பார்த்து ரோகினி மிரண்டு போய் நிற்கிறார். இத்துடன் நேற்றைய எபிசோட் நிறைவடைந்தது. 
மேலும் படிக்க 
Kajana: முதல்முறையாக திரையில் யாளி விலங்கு… வியக்க வைக்கும் வகையில் வெளியான ‘கஜானா’ டிரைலர்…
Mohan G: படங்களுக்கு முடிந்தவரை தமிழில் பெயர் வையுங்கள்.. இயக்குநர் மோகன் ஜி காட்டம்!
Sujitha on Suriya kiran: அண்ணன் மறுபிறவி எடுத்து சாதிக்க வேண்டும்… உருக்கமான போஸ்ட் பகிர்ந்த சுஜிதா

மேலும் காண

Source link