வேட்டையன் பட ஷூட்டிங் ஆந்திரா கடப்பாவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் வைரலாகி வருகிறது.

வேட்டையன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெளரவத் தோற்றத்தில் நடித்து சமீபத்தில் வெளியான படம் லால் சலாம். மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிய இந்தப் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஆனால் ரஜினி காட்சிகள் சிறப்பாக இருந்தது அவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. லால் சலாம் படம் ரசிகர்களுக்கு ஒரு போனஸ் என்றுதான் சொல்ல வேண்டும். ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்கள் தற்போது ஆவலாக காத்திருப்பது வேட்டையன் படத்தின் அப்டேடிற்காக தான். தற்போது ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். துஷாரா விஜயன், ரித்திகா சிங், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ரானா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்து அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

வேட்டையன் படப்பிடிப்பு

View this post on Instagram

A post shared by Ritika Singh (@ritika_offl)

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியது. பின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று தற்போது ஆந்திரா கடப்பாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையில் படப்பிடிப்புத் தளத்தில் நடிகை ரித்திகா சிங் காயம்பட்டார். கண்ணாடி ஒன்றில் மோதி அவரது உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டன.

தற்போது காயங்களில் இருந்து குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளார் ரித்திகா சிங். ரஜினிகாந்துடன் படப்பிடிப்பிற்கு இடையில் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்துடன் ஆங்கில பாடல் ஒன்றை பதிவிட்ட அவர் ரஜினியுடன் நடிப்பதை தனது வாழ்க்கையின் சிறந்த தருணங்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க : Poornima Ravi: புதிய படங்களில் ஒப்பந்தம்.. சினிமாவில் அடுத்தடுத்த பயணத்தைத் தொடங்கிய பிக்பாஸ் பூர்ணிமா!

Ethirneechal: தர்ஷினியை காப்பாற்றிய போலீஸ்: கத்திக்குத்து பட்ட ஜீவானந்தம் என்ன ஆனார்? எதிர்நீச்சல் அப்டேட்!