Vani Bhojan: விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.. வெற்றி கழகத்தில் இணைகிறாரா நடிகை வாணி போஜன்?

செங்களம் வெப் சீரிஸில் நடித்த போது தனது அரசியல் ஆசை இருந்ததாக நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில் எல்லாவற்றுக்கும் ஒரு அறிக்கை மூலம் பதிலளித்தார். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை, போட்டியும் இல்லை என தெரிவித்த விஜய், 2026 சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என தெரிவித்திருந்தார்.

மேலும் தான் முழு நேர அரசியல் பணி செய்யும் நோக்கத்தில் இன்னும் 2 படங்களோடு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விஜய்யின் இந்த அதிர்ச்சியான முடிவும், அவரது அரசியல் வருகையும் பாராட்டையும், எதிர்ப்பையும் ஒருங்கே பெற்றுள்ளது. ஆனால் பலரும் விஜய்க்கு ஒரு முறையாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரைத்துறையை சேர்ந்த பலரும் வெளிப்படையாகவே ஆதரவு  தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை வாணி போஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் அரசியல் வருகை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “ஒரு பிரபல அரசியல் தலைவரின் வாழ்க்கையை தான்  “செங்களம்” என்ற பெயரில் நாங்கள் வெப் சீரிஸாக எடுத்தோம். அதில் நான் நடித்தபோது எனக்கு அரசியல் ஆசை இருந்தது. இப்போதும் இருக்கும் நிலையில் விரைவில் அரசியலுக்கு வருவேனா என்பது தெரியவில்லை.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். என்னை பொறுத்தவரை நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்கலாம். அப்போது தான் அவர் மக்களுக்காக என்ன செய்கிறார் என்பதும், விஜய் அரசியலின் நோக்கம் என்ன என்பதும் நமக்கு தெரிய வரும்.

வாணி போஜன் குறிப்பிட்ட செங்களம் வெப் சீரிஸில் அவர் சூர்யகலா என்ற கேரக்டரில் அரசியல்வாதியாக நடித்திருந்தார். அதில் அவரது கட்சியின் பெயர் நமது கழகம் என இடம்பெற்றிருக்கும். இப்படியான நிலையில் வாணி போஜன் தனது அரசியல் ஆசையை தெரிவித்துள்ள நிலையில் அவர் விரைவில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.

வாணி போஜனின் திரைப்பயணம்

2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா சீரியல் மூலம் தமிழுக்கு வந்த வாணி போஜன் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அவரை ‘சின்னத்திரை நயன்தாரா’ என ரசிகர்கள் அழைப்பது வழக்கம். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கிய வாணி போஜன் தொடர்ந்து லாக் அப், மலேசியா டூ அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆர்யன் படங்கள் வெளியாகவுள்ளது. மேலும் ட்ர்பிள்ஸ், தமிழ் ராக்கர்ஸ், செங்களம் ஆகிய வெப் சீரிஸிலும் வாணி போஜன் நடித்துள்ளார்.

Source link