நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து, அவருடனான கலந்துரையாடலை கவியாக வடித்துள்ளார்.
அதில், 80 நிமிடங்கள் உரையாடியபோது, கிரீன் டீயைத் தவிர வேறு எந்த இடைஞ்சலும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். இதனை, டீ மட்டும்தான் ரஜினி கொடுத்தார் என வைரமுத்து சாடையாக கூறியிருப்ப்பதாக, பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்புக்குப் பிறகு, வைரமுத்து வெளியிட்ட பதிவு இதோ…
https://x.com/Vairamuthu/status/1855075536428495190?t=Yy_QG7qCJp3BUnP_SP2OBg&s=08
கடிகாரம் பாராத
உரையாடல்
சிலபேரோடுதான் வாய்க்கும்
அவருள் ஒருவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
80நிமிடங்கள்
உரையாடியிருக்கிறோம்
ஒரே ஒரு
‘கிரீன் டீ’யைத் தவிர
எந்த இடைஞ்சலும் இல்லை;
இடைவெளியும் இல்லை
சினிமாவின் அரசியல்
அரசியலின் சினிமா
வாழ்வியல் – சமூகவியல்
கூட்டணிக் கணக்குகள்
தலைவர்கள்
தனிநபர்கள் என்று
எல்லாத் தலைப்புகளும்
எங்கள் உரையாடலில்
ஊடாடி ஓய்ந்தன
எதுகுறித்தும்
அவருக்கொரு தெளிவிருக்கிறது
தன்முடிவின் மீது
உரசிப் பார்த்து
உண்மை காணும்
குணம் இருக்கிறது
நான்
அவருக்குச் சொன்ன
பதில்களைவிட
அவர் கேட்ட கேள்விகள்
மதிப்புமிக்கவை
தவத்திற்கு ஒருவர்;
தர்க்கத்திற்கு இருவர்
நாங்கள்
தர்க்கத்தையே
தவமாக்கிக் கொண்டோம்
ஒரு காதலியைப்
பிரிவதுபோல்
விடைகொண்டு வந்தேன்
இரு தரப்புக்கும்
அறிவும் சுவையும் தருவதே
ஆரோக்கியமான சந்திப்பு
அது இது
இவ்வாறு வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கவி பதிவிட்டுள்ளார்.