காணும் பொங்கல் கொண்டாட்டம்! வரலாறு என்ன? சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தை திருநாளாம் பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நேற்று உழவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சுற்றுலா தளங்களுக்கு செல்வார்கள். மேலும் படிக்க..
ஆரவாரத்துடன் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! ஏற்பாடுகளும், சிறப்பம்சமும் என்ன?
தை திருநாளாம் பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நேற்று உழவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சுற்றுலா தளங்களுக்கு செல்வார்கள். பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. மேலும் படிக்க..
வாவ்.. வைரம் பதிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் மாடல்.. வியந்து பார்க்கும் பக்தர்கள்
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் படிக்க..
யாத்திரையின்போது அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறாரா ராகுல் காந்தி?
உத்தர பிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். மதகுருமார்களை தவிர 10,000 சிறப்பு விருந்தினர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் படிக்க..
வெற்றியா? தோல்வியா? சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தனக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவராக இருப்பவர் சந்திரபாபு நாயுடு. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் படிக்க..