top news India today abp nadu morning top India news April 9 2024 know full details



வாக்கிங்கில் வாக்கு சேகரிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து உற்சாகமான தேனி மக்கள்!

மக்களவை தேர்தலுக்கான பரப்புரைக்காக தேனி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நடைபயிற்சியின்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இன்னும் ஒரு வாரம் மட்டுமே மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தினத்துக்கும் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையானது மிகத் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இங்கு திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் இடையே 4  முனை போட்டியானது நிலவுகிறது. இப்படியான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் படிக்க..

“மோடி ஃபேஷன் ஷோ கூட நடத்தட்டும்.. ஓட்டு விழாது” – தக் லைஃப் செய்த கார்த்தி சிதம்பரம்!

பிரதமர் மோடி என்ன செய்தாலும் பாஜகவுக்கு ஓட்டு விழாது என சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த இந்திய தேசமும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலை நோக்கி காத்திருக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியைப்  பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில் வழக்கம்போல மத்தியில் பாஜக vs காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி காங்கிரஸ் கட்சி, பாஜகவை வீழ்த்த “இந்தியா” கூட்டணி அமைத்துள்ளது. மேலும் படிக்க..

பிரதமர் மோடி வேலூரில் இன்று பரப்புரை – பலத்த பாதுகாப்பு, போக்குவரத்தில் மாற்றம்

 பிரதமர் மோடி வேலூர் வருவதை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள்லும் வரும் 19ம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னையில் ரோட் ஷோவில் ஈடுபட்டார். தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். மேலும் படிக்க..

வேட்பாளரின் முழு சொத்து விவரங்களையும் வெளியிட அவசியம் இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களை வெளியிடுவது அவசியம். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தங்களின் சொத்து விவரங்களையும் வருமான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். அதுமட்டும் இன்றி, இணையரின் (கணவன்/மனைவி) சொத்து விவரங்களையும் வருமான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க..

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி 7வது முறையாக தமிழ்நாடு வருகை தந்தார். தனி விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச். ராஜா ஆகியோர் வரவேற்றனர். மேலும் படிக்க..
 

மேலும் காண

Source link