TN Voter List: தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள்.. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..


<p>தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு&nbsp; தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.&nbsp;</p>
<p>இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக வாக்காளர் பட்டியல் பணிகள் தேர்தல் ஆணையம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் &lsquo;சிறப்பு சுருக்கமுறை திருத்தம்&rsquo; எனப்படும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். &nbsp;அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்டது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.&nbsp;</p>
<p style="text-align: left;">வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான மனுக்கள் அன்று முதல் பெறப்பட்டன. டிசம்பர் 9 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் பெறப்பட்டன. இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடைபெற்றது. முதலில் ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால இது தாமதமாகின. அதன்படி இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.&nbsp;</p>
<p style="text-align: left;">தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை &nbsp;6,18,9,0348 ஆகும். அதில் ஆண்கள் – 3,03,96,330, பெண்கள் – 3,14,85,724, மூன்றாம் பாலினம் – 8,294 பேர் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் &nbsp;6,60,419 பேரும், கேவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 4,62,612 பேரும் அடங்குவர். குறைந்தபட்ச வாக்காளர்கள் நாகை மாவட்டம் கீழ்வேளூர் – 1,72,140 உள்ளனர். அதனை தொடர்ந்து சென்னை துறைமுகம் 1,72,624 ஆகும். வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாடு வாக்காளர்களின் எண்ணிக்கை 3480 பேர் ஆகும். மாற்று திறனாளிகள் 4,32,805 பேர் உள்ளனர். இதனை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.&nbsp;</p>

Source link