Thaipusam 2024: | Thaipusam 2024:

Thaipusam 2024:  தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனத்தை பார்ப்பதற்காக காலை முதல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா:
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.   
வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க, சத்தியஞான சபையில் தர்மசாலையை நிறுவினார். அன்று முதல் இன்றுவரை அணையா அடுப்பு எரிந்து பசிப்பிணி நீக்கிவருகிறது.   25.17.1872 அன்று தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்ம் வழிபாடு விழா நடைபெற்றது. 20.10.1973 அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு வள்ளலார் அருளுரை வழங்கியதாக நம்பப்படுகிறது. 
வள்ளலார் அன்று முதல் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல் அருவமாக நிறைந்து, அருட்பெருஞ்சோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.  வள்ளலார்  ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. மாதந்தோறும் பூச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.  வள்ளலார் ஏற்றிய அந்த அகல் தீபம் இன்று வரை அணையா ஒளியாகப் பேணப்பட்டு வருகிறது. 
குவியும் பக்தர்கள்:
தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். பொதுவாக தைமாசம் தவிர்த்த பிற மாத பூசநட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் மட்டுமே நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும்.
தைப்பூசத்தன்று ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். காலை 6 மணி 10 மணி நண்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை அதிகாலை ஐந்து முப்பது மணி என ஆறு காலங்களில் ஜோதி தரிசனத்தை காணும் பக்தர்கள்  அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை என கோஷத்துடன்  தரிசனம் செய்வார்கள். 

#WATCH | Cuddalore, Tamil Nadu: Thousands of devotees thronged Sathya Gnana Sabai on the occasion of ‘Thai Pusam’. The 153rd Thai Pusa Jothi Dharshin was held in Vadalur Vallalar town. pic.twitter.com/BhuK9U8HJz
— ANI (@ANI) January 25, 2024

இந்த நிலையில், இன்றைய தினம் தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி சத்திய ஞான சபையில் காலை 6 மணிக்கு  ஏழு திரைகள் நீக்கி ஜோதி காண்பிக்கப்பட்டது. இன்றை தினம் காலை 10 மணி  முதல் பகல் 1.00 மணி, இரவு 7 மணி முதல் 10 மணி வரை, நாளை காலை 6 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
கருப்புத்திரை, நீலத்திரை,பச்சைத்திரை, சிவப்புத்திரை, பொன்மைத்திரை, வெண்மைத்திரை, கலப்புத்திரை ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.  இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.  அப்போது, கூடியிருந்த பக்தர்கள் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

Source link