Tamilnadu Latest Headlines News Update 11th January 2024 Tamilnadu Flash News TN Bus Strike | TN Headlines: குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும்


TNPSC Group 2 Result: முடிவுக்கு வந்த காத்திருப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு – பார்ப்பது எப்படி?

நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று (ஜன.11) வெளியாகி உள்ளன. குறிப்பாக, நேர்காணல் கொண்ட பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் வெளியாகி உள்ளன. இதைப் பார்ப்பது எப்படி என்று பார்க்கலாம். அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் படிக்க

TN Rain Alert: அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும்.. திருநெல்வேலிக்கு உண்டு… சென்னைக்கு?

கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்தியரேகையை  ஒட்டிய  இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில்,  இலங்கைக்கு  தெற்கே,  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் படிக்க


Sabarimala Temple: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்: தமிழ்நாடு அரசு கடிதம்.. முழு விவரம் உள்ளே..

கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக அளவில் புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு தமிழ்மாதம் பிறப்பு அன்று திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெற்று அடுத்த சில நாட்களில் நடை அடைக்கப்படும். மேலும் படிக்க


Lok Sabha Election 2024: வெற்றி வாய்ப்பு உள்ளோருக்குத்தான் மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்கப்படும் – இபிஎஸ் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளோருக்கு மட்டும்தான் சீட் கொடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவின் தலைமையில் கூட்டணி உருவாக்கப்பட்டு தேர்தலைச் சந்திப்போம் என ஏற்கனவே அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

OPS Case: “ஓபிஎஸ்.,க்கு மீண்டும் அடி” அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை தொடரும் – நீதிமன்றம் கறார்

அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இவரும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் படிக்க
 
 
 
 

Source link