Tamilnadu headlines news Today 3 PM headlines 28th april 2024 | TN Headlines: மே 1வரை வெப்ப அலை; நிவாரண நிதி வழங்கிய மத்திய அரசு


TN Weather Update: வதைக்கு வெயில்.. 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் வெப்பநிலை.. மே 1 ஆம் தேதி வரை வெப்ப அலை..
குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் மே 1 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மே 2 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் படிக்க..
ரூ.397 கோடி! தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதமும் தமிழ்நாட்டிற்கு மிகவும் மோசமாக அமைந்து வருகிறது. நடப்பாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மிக மோசமான பாதிப்பைச் சந்தித்தது. சென்னையில் பல இடங்களிலும் ஒரு வாரத்திற்கு மேல் 10 நாட்களாக தண்ணீர் வற்றாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.மேலும் படிக்க..
“முதலாளிகள் கடன்தான் தள்ளுபடி! விவசாயிகளின் கடன் அல்ல” – மோடியை விளாசிய கர்நாடக முதலமைச்சர்
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டத்தில் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக நேற்று 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் படிக்க..
தலைமை ஆசிரியருக்கு தாய் வீட்டு சீதனமாக பல்வேறு பொருட்கள்; பிரியாவிடை கொடுத்த மக்கள் – உசிலம்பட்டியில் நெகிழ்ச்சி
உசிலம்பட்டி அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு துவக்கப் பள்ளியில் கல்வியை பயிற்று வித்த தலைமையாசிரியருக்கு, அவர் ஓய்வின்போது தாய் வீட்டு சீதனமாக பல்வேறு பொருட்களை வழங்கி பிரியாவிடை கொடுத்து அனுப்பிய கிராம மக்களின் பிரிவு உபச்சார விழா நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க..
TNPSC Group 1: உதவி ஆட்சியர், எஸ்பி… டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
உதவி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட தமிழக அரசின் உயரிய பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஏப்ரல் 27) கடைசித் தேதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். கூடுதல் தகவல்களுக்கு

மேலும் காண

Source link