Tamilnadu Agriculture Budget 2024 will present by minister mrk panneerselvam in assembly today | TN Agriculture Budget 2024: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்


TN Agriculture Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெடை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்:
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை,  சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். அதில் 7 அம்சங்களில் பல்வேறு தரப்பினருக்கான திட்டங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. இந்நிலையில் இன்று, தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். திமுக தலைமையில் 2021ம் ஆண்டு ஆட்சி அமைந்ததுமே முதலே,  தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2023-24 ஆம் நிதி ஆண்டில் வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் சற்றே உயர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: TN Budget 2024: தமிழக அரசின் மொத்த பட்ஜெட் மதிப்பு ரூ.3.48 லட்சம் கோடி – நிதி பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா?
மக்களவை தேர்தல் தாக்கல் இருக்குமா?
வேளாண் பட்ஜெட்டில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிக பிரிவுக்கான திட்டங்கள் மட்டுமின்றி, கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய துறைகளுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது. பொது பட்ஜெட்டில் பல்வேறு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை போன்று, இன்றைய வேளாண் பட்ஜெட்டில் தங்களுக்கான நலத்திட்டங்கள் இடம்பெறும் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலும் நெருங்குவதால், வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த விவசாயிகளை கவரும் நோக்கில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
தையும் படிங்க: TN Budget Highlights: அரசின் அட்டகாச பட்ஜெட்; முதல்வரின் முத்தான 15 முக்கிய திட்டங்கள் இவைதான்!
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
மூத்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவது,  மண்வள மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பது, வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, காப்பீட்டு தொகையை விடுவிப்பது, கிராமங்கள் தோறும் உலர் களங்கள் அமைப்பது, நேரடி கொள்முதலை அதிகரிப்பது, அரசும் தனியாரும் இணைந்து ஒவ்வோர் ஊராட்சியிலும் உழவர் உதவி மையம், விவசாய மேலாண்மை மையங்களை செயல்படுத்துவது மற்றும் அரசு உதவிகள் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகுமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண

Source link