கரூர் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரவக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாட்டின் விடுதலைக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு தியாகத்தை எப்போதும் போற்றுவேன், சமூக நீதிப் பாதையில் பயணித்து, சாதி,மதம், பாலினம்,பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைத்து, சம வாய்ப்பு சம உரிமை கிடைக்க பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் கூட்டத்தில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். 20க்கு மேற்பட்ட நபர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. கூட்டம் முடிவடைந்த பின்பு அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் மதியழகன் கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படி, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், சர்வர் பிரச்சினை காரணமாக அவ்வப்போது இணைய வழியாக உறுப்பினராக இணைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஓரிரு தினங்களில் அது சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தனர். பெண்கள் முதியவர்கள் ஆர்வமுடன் உறுப்பினர் சேர்க்கையில் இணைந்து வருகின்றனர்.
மேலும், கிராமங்கள் தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட உள்ளதாகவும், ஆண்ட்ராய்டு போன் வசதி இல்லாத பொதுமக்களுக்கு, நிர்வாகிகள் தங்களது செல்போன்கள் மூலமாக உறுப்பினர் சேர்க்கைக்கான நடவடிக்கையில் இறங்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் காண