Tamil Thalaivas: வெற்றிகளை குவிக்கும் நோக்கில் தமிழ் தலைவாஸ்; அடுத்த போட்டிகள் எப்போது? யாருடன்?

ப்ரோ கபடி லீக் தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. ப்ரோ கபடி லீக் தொடங்கி முதல் சில வாரங்களில் புள்ளிகள் அட்டவணையில் பெரிதாக மாற்றங்களே நிகழவில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக புள்ளிப்பட்டியலில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் மெல்ல மெல்ல முன்னேறி வருகின்றன. குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணி மொத்தம் உள்ள 12 அணிகள் அடங்கிய புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி கடந்த சில போட்டிகளில் பெற்றுள்ள வெற்றியினால் புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் இருந்து 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. அதே நேரத்தில் 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 25 புள்ளிகளுடன் இருப்பதுடன் எதிர்மறை புள்ளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதாவது மைனஸ் 14ஆக குறைந்துள்ளது. இது தமிழ் தலைவாஸ் அணிக்கு சாதகமாக மாறும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 9 போட்டிகள் மீதமுள்ளன. இதில் தமிழ் தலைவாஸ் அணி தனது அடுத்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை வரும் 21ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.  மீதமுள்ள 9 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தனது வெற்றியை உறுதி செய்தால் கட்டாயம் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். தமிழ் தலைவாஸ் அணி வரும் காலங்களில் உள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்துக்கொண்டு உள்ளனர்.

தமிழ் தலைவாஸ் அணிக்கு அடுத்து உள்ள போட்டிகளின் விபரம்

ஜனவரி 21: பெங்களூரு புல்ஸ் vs தமிழ் தலைவாஸ் – கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஹைதராபாத்.

ஜனவரி 24: தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ் – கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஹைதராபாத்.

ஜனவரி 28: தமிழ் தலைவாஸ் vs யு மும்பா – பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கம், பாட்னா.

ஜனவரி 31: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் – பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கம், பாட்னா.

பிப்ரவரி 4: குஜராத் ஜெயண்ட்ஸ் vs தமிழ் தலைவாஸ் – தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கம், டெல்லி.

பிப்ரவரி 6: தமிழ் தலைவாஸ் vs  உ.பி யோதாஸ் – தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கம், டெல்லி.

பிப்ரவரி 11: தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டன் – நேதாஜி உள்விளையாட்டு அரங்கம், கொல்கத்தா.

பிப்ரவரி 14: தபாங் டெல்லி  vs தமிழ் தலைவாஸ் – நேதாஜி உள்விளையாட்டு அரங்கம், கொல்கத்தா.

பிப்ரவரி 18: தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ் – தவ் தேவிலால் உள்விளையாட்டு அரங்கம், பஞ்ச்குலா.

Source link