Tamil Nadu latest headlines news till afteroon 6th february2024 flash news details here



TN Weather Update: 12-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. அதிகாலையில் பனிக்கு வாய்ப்பு..

தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து, 8 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதியும், தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் படிக்க

Election Commision: 2 நாள் பயணமாக சென்னை வந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள்.. முக்கிய ஆலோசனை மேற்கொள்ள முடிவு..!

நாடே எதிர்நோக்கும் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க இந்த முறையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. மேலும் படிக்க

Saithai Duraisamy :காணாமல் போன மகன்…தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி சன்மானம் – சைதை துரைசாமி அறிவிப்பு

சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் தன் படபிடிப்பிற்கு இடம் தேர்வு செய்ய தன் நண்பருடன் காரில் சட்லஜ் நதிக்கரை அருகே சென்றபோது, திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது.  கஷங் நாலா பகுதியில் இந்த விபத்து நடந்த நிலையில், காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் உயிரிழந்தார். காரில் இருந்த மற்றொருவர் காயத்துடன் மீட்கப்பட்டார். மேலும் படிக்க

கூட்டணி பேச்சுவார்த்தை…..பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்த சி.வி.சண்முகம்

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சந்தித்து  நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசியதில் 8 தொகுதிகளை பாமக கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், அதிமுக-பாமக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது என உறுதியாகியுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் எத்தனை தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. மேலும் படிக்க

மக்களவைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம் – ஓ. பன்னீர் செல்வம் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தலில் நாங்கள் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.  முன்னதாக, அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது மட்டும் இல்லாமல், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், ஓ. பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியுள்ளது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

மேலும் காண

Source link