Tamil Nadu latest headlines news till afteroon 4th february2024 flash news details here | TN Headlines: நன்றி தெரிவித்த விஜய்; 25-ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடி



“மக்களின் பேரன்போடு அரசியல் பயணம்” வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறிய விஜய்!

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் (Vijay), அரசியலுக்கு வர போவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்தது. நேற்று முன்தினம், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார் விஜய். நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். மேலும் படிக்க

DMK-MDMK: “திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது.. எங்கள் சின்னத்தில் போட்டியிடுவோம்” : மதிமுக.

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையோடி அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் உள்ள மதிமுக இன்று தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் படிக்க

DMK-CPM Alliance: “திமுக – சிபிஎம் கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது” -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தகவல்

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையோடி அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் இன்று தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மேலும் படிக்க

Cervical Cancer: நாட்டில் 3.4 லட்சம் பேருக்கு கர்ப்பபை வாய்  புற்றுநோய்! தமிழ்நாட்டில் இத்தனை பேருக்கா? : அதிர்ச்சி ரிப்போர்ட்!

கர்ப்பபை வாய் புற்றுநோய் என்பது பெண்கள் மத்தியில் காணப்படும் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இது பெண்ணின் கருப்பை வாயில் உள்ள செல்களின் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி அல்லது யோனியில் இருந்து கருப்பைக்கு நுழைவதால் ஏற்படுகிறது.  பொதுவாக, கர்ப்பபைவாய்  புற்றுநோயானது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், புற்றுநோயின் மிகவும் சிகிச்சையளிக்கக்கூடிய வடிவங்களில் ஒன்றாகும். மேலும் படிக்க

வருகின்ற 25-ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடி ; பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப விழா ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருப்பூரில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும் படிக்க

மேலும் காண

Source link