PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” – பிரதமர் மோடி..
பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நமது கடின உழைப்பாளர்களான பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளேன். மேலும் படிக்க
Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் – மதுரையில் எடப்பாடி பழனிசாமி
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்வில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் படிக்க
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
சசிகலா காலில் விழுந்தது தொடர்பான அமைச்சர் உதயநிதியின் விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நான் பெரியவர்களிடம் ஆசி வாங்குவது தவறா? வேறு யாரிடமோ, மூன்றாவது நபரிடமோ ஆசி வாங்கவில்லையே” என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அதிமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளது என முதலமைச்சர் விமர்சனம் செய்வதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் படிக்க
TN Weather Update: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை.. அதிகபட்சமாக எங்கே தெரியுமா?
தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 2-ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் படிக்க
Latest Gold Silver Rate: வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து ரூ. 51,120 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ரூ.6,390 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,880 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,860 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் படிக்க
மேலும் காண