Tamil Nadu latest headlines news till afternoon 26th march 2024 flash news details here | TN Headlines: பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு; 400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்



Lok Sabha Election: பங்குனி உத்திர சிறப்பு! தமிழ்நாட்டில் ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுத் தாக்கல்!

வேட்பு மனுத்தாக்கல் செய்ய தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஞாயிற்று கிழமை வரை சிலரே வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக,  நேற்று ஒரே நாளில் மட்டும் 405 வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். நேற்று, பங்குனி உத்திரம் தினம் என்பதால், அதிகமான வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

Lok Sabha Election 2024: ”அப்பா என்ற முபாரக்”.. கதறி அழுத திண்டுக்கல் சீனிவாசன்! மேடையில் நெகிழ்ச்சி சம்பவம்..

முன்னாள் அமைச்சர்களான கழகப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள். இதில் வேட்பாளர் பேசிய பொழுது,  தாய் மற்றும் தந்தை ஆகியோரை இழந்த தனக்கு முன்னாள் அமைச்சர்கள் இரு அப்பாக்களாக உள்ளனர் என பேசிய பொழுது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மனம் உருகி தேம்பி கண்ணீர் விட்டு அழுதார். மேலும் படிக்க

MDMK Symbol: 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பம்பரம் என்ற தேர்தல் ஆணையம்; சோகத்தில் மதிமுக

மதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம் மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக போட்டியிட உள்ளதாகவும், இந்த தேர்தல்களில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாக கூறி, தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க

Lok Sabha Election 2024: ”வீட்டுக்கு வந்து டீ குடிங்க” முதலமைச்சர் ஸ்டாலினை அழைத்த நபர் – அடுத்து நடந்த சுவாரஸ்யம்!

தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலின் லயன்ஸ் டவுன் பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த போது அந்த பகுதி உள்ள ஒரு வீட்டில் அவரை தங்கள் வீட்டில் வந்து தேனீர் அருந்த அழைப்பு விடுத்தனர். இதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் அந்த இல்லத்திற்கு சென்று தேனீர் அருந்தினார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

PMK Manifesto: பா.ம.க. தேர்தல் அறிக்கை:ராமதாஸ், அன்புமணி முன்னிலையில் நாளை வெளியீடு

தமிழ்நாட்டில் ஆளும் திமுக, எதிர்க் கட்சியான அதிமுக ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாமகவின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை (27.03.2024) புதன் கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும் படிக்க

மேலும் காண

Source link