Tamil Nadu latest headlines news till afternoon 22nf march 2024 flash news details here | TN Headlines: விருதுநகரில் ராதிகா போட்டி; தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு



BJP Candidate List: பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: விருதுநகரில் ராதிகா!

18ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி வருகிறது. அதன்படி, பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வட சென்னையில் வழக்கறிஞர் பால் கனகராஜ், பொள்ளாச்சியில் வசந்தராஜன் உள்ளிட்டோர் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

Ponmudi Oath Ceremony: உச்சநீதிமன்ற கெடு.. பணிந்த ஆளுநர்.. பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடி பதவியேற்பு..

கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பு வகித்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.72 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.  இதனால், 2011ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் விசாலாட்சி மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், கடந்த 2016ம் ஆண்டு இருவரையும் விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. மேலும் படிக்க

ADMK Manifesto Highlights: மாதந்தோறும் மகளிருக்கு ரூ.3000, நீட் தேர்வுக்கு மாற்று, விவசாயிகளுக்கு ரூ.5000: அதிமுக டாப் 10 தேர்தல் வாக்குறுதிகள்!

மாதந்தோறும் ஏழை மகளிருக்கு ரூ.3000 வழங்கப்படும், நீட் தேர்வுக்கு மாற்று முறை அறிமுகம் செய்யப்படும், விவசாயிகளுக்கு ரூ.5000 மாத ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக அளித்துள்ளது. சென்னை, ராயப்பேட்டை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 133 அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. மேலும் படிக்க

DMDK Canditaes: விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டி – தேமுதிக அறிவிப்பு

DMDK Canditaes: விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அண்மையில் மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் மகன் மூத்த மகனாவார். இதேபோன்று, அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்ட மற்ற 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் படிக்க

Exclusive: செந்தில்பாலாஜி இல்லாதது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா? – அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கம்

கோவை வரதராஜபுரம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, “இந்த தேர்தலில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிரணியினர் பிரிந்து உள்ளார்கள். ஒவ்வொரு நாளும் உதயசூரியன் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மேலும் படிக்க

மேலும் காண

Source link