CM MK Stalin: ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம்; 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
‘மக்களுடன் முதல்வர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்வான இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரங்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
TNPSC: அடடே… 15 நாட்களில் 1253 பேருக்கு அரசுப்பணி; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு- விமர்சனங்களுக்கு பதிலா?
2024ஆம் ஆண்டில் பிப்ரவரி 1 முதல் 15 வரையிலான 15 நாட்களில் 1253 பேர், அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இதற்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி, தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்யும். மேலும் படிக்க
TNPSC Members Appointment: டிஎன்பிஎஸ்சிக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம்; அரசு அறிவிப்பு- யார் யார்?
டிஎன்பிஎஸ்சி அமைப்பின் புதிய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவனருள், ஐஆர்எஸ் அதிகாரி சரவண குமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார், முனைவர் பிரேம் குமார் ஆகிய 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நியமிக்கப்பட்டதில் இருந்து 6 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
TN Weather Update: 22 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கும்.. வெப்பநிலை அதிகரிக்கும் எச்சரிக்கை..
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மேலும் படிக்க
Thiruvallur Lok Sabha Constituency: திருவள்ளூர் மக்களவை தொகுதி – எந்த கட்சிக்கு சாதகம்? இதுவரை சாதித்தது யார்? தேர்தல் வரலாறு
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். மேலும் படிக்க
மேலும் காண