Tamil Nadu latest headlines news till afternoon 13th march 2024 flash news details here | TN Headlines: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரிச் சலுகை; விஜய் கட்சியில் இணைந்த நடிகரின் மக



Senthil Balaji Case: அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு  தடை விதிக்க மறுப்பு – ட்விஸ்ட் வைத்த சென்னை உயர்நீதிமன்றம்..

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு  இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான அதிமுக ஆட்சியின்போது செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துறையில் பணியாளர்களை பணியமர்த்த, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் படிக்க

TVK Vijay: விஜய் கட்சியில் இணைந்த நடிகர் சங்க தலைவர் குடும்பத்தின் முக்கிய நபர்! யார் தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடிகர் விஜய், ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து முடித்த பிறகு 2026ம் ஆண்டு முதல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் களம் காண போகிறார் என்றும் அவரின் அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து சென்னை பனையூரில் உள்ள அவர்களின் கட்சி அலுவுலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க

TN GOVT: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரிச் சலுகை – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து தமிழ்நாடு அரசு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வருமானவரி செலுத்தும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

TN CM MK Stalin: அண்டப்புளுகு ஆகாசப்புளுகு; இது மோடி புளுகு: வச்சி செய்த முதலமைச்சர் ஸ்டாலின்

மத்திய அரசின் எந்த திட்டங்களை நாங்கள் தடுத்தோம் என பிரதமர் மோடி விளக்கட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  பொள்ளாச்சியில் முடிவுற்ற பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் பல நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  இந்த நிகழ்ச்சியில் கடந்த 3 ஆண்டுகால சாதனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கி உரையாற்றினார். மேலும் படிக்க

TN CM MK Stalin: தமிழ்நாடு வளர்வதை பொறுக்க முடியவில்லை; அதனால்தான் இந்த வேலை – பொங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில் நலத்திட்ட உதவிகளை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் புறப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்றடைந்தார். மேலும் படிக்க

மேலும் காண

Source link