Tamil Nadu latest headlines news till afnoon 3rd february2024 flash news details here



பிப்ரவரி 8ம் தேதி நாடாளுமன்றத்தில் தி.மு.க. கருஞ்சட்டை போராட்டம் – டி.ஆர். பாலு அறிவிப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி திமுக எம். பி.க்கள் சார்பில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு எம்.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார்.   வரும் நிதியாண்டு 2024-25  க்கான இந்திய  ஒன்றிய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  மக்களவையில் தாக்கல் செய்தார். மேலும் படிக்க

L.K Advani Bharat Ratna Award: எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது – பிரதமர் மோடி அறிவிப்பு..

பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 96 வயதாகும் எல்.கே அத்வானி துணை பிரதமர், உள்துறை அமைச்சர் என பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.  இது தொடர்பான பிரதமர் மோடியின் பதிவில், “ ஸ்ரீ எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவரிடம் பேசி, இந்த கவுரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான, இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பு மகத்தானது. மேலும் படிக்க

TN Weather: மாறி வரும் பருவநிலை.. நாளை முதல் வறண்ட வானிலையே இருக்கும்.. இன்றைய நிலவரம் என்ன?

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி இன்று, தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  மேலும் படிக்க

கூட்டணிக்கு யாரும் வராததால் பரிதாப நிலையில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பி.எஸ். விமர்சனம்

விழுப்புரம் : ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டினர் ஆனால் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை என்றும் கூட்டணிக்கு யாரும் செல்லாததால் பரிதாப நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளதாக ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

Latest Gold Silver Rate: ஹாப்பி நியூஸ் மக்களே! குறைந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,960 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,870  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,720 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,340 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் படிக்க
 
 

மேலும் காண

Source link