Tamil Nadu Latest Headlines News 28th January 2024 Flash News Details Here


DMK – Congress Alliance: 9 இல்லை, 15 தொகுதிகள் வேண்டும்: காங்கிரஸ்க்கு காது கொடுக்குமா திமுக? இன்று பேச்சுவார்த்தை

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதேபோல், இம்முறை எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என, I.N.D.I.A. கூட்டணியின் மூலம் காங்கிரஸ் கட்சி தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் படிக்க

DMK: புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமைவது உறுதி – அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

புதுச்சேரி மாநிலத்தில் திமுக மாணவர் அணி மற்றும் நெல்லித்தோப்பு, காமராஜர் நகர் தொகுதிகள் சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சாரம் அவ்வைத் திடலில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.பி.மணிமாறன் தலைமை வகித்தார். மேலும் படிக்க

தமிழகத்தில் மட்டும் தான் இலாகா இல்லாத அமைச்சர் உள்ளார்கள் – அண்ணாமலை

விழுப்புரம் : தமிழகத்தில் ஆளுகின்றவர்களுக்கு ஒரு அரசியலும். மக்களுக்கு ஒரு அரசியல் உள்ளதால் தமிழக அரசியம் முழுமையாக மாற்றப்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் மட்டும் தான் இலாகா இல்லாத அமைச்சர் உள்ளதாகவும் இன்னும் 40 நாட்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  மேலும் படிக்க

Nitish Kumar: உடைந்தது I.N.D.I.A. கூட்டணி..! ராஜினாமா ஏன்? – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பரபரப்பு விளக்கம்

Nitish kumar: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மாநில ஆளுநரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். இதன் மூலம், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கடந்த 2022ம் ஆண்டு முதல், நடைபெற்று வந்த நிதிஷ்குமார் தலைமயிலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதேநேரம், இன்னும் சில மணி நேரங்களில் பாஜகவின் ஆதரவுடன், நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க

Accreditation Education institutes: உயர் கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம்: வருகிறது புதிய மாற்றம்! நோக்கம் என்ன?

இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் (HEIs) இனி அங்கீகாரச் செயல்பாட்டின் போது கிரேடுகளைப் பெறாது என கூறப்படுகிறது. மாறாக, அவை “அங்கீகாரம் பெற்றவை அல்லது அங்கீகாரம் பெறாதவை” என்று மட்டுமே இனி வகைப்படுத்தப்படும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க

Source link