T20 World Cup: T20 உலகக்கோப்பை தொடர்… ரோஹித் சர்மாதான் கேப்டன்.. அடித்துச்சொல்லும் ஆகாஷ் சோப்ரா

டி 20 தொடரில் ரோஹித் சர்மா- விராட் கோலி:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாத வண்ணம் வெளியான அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள்  உற்சாகமடைந்தனர். அதன்படி இருவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெற்றனர்.

இந்நிலையில், உலகக்கோப்பை டி20 தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவது ஒரளவுக்கு உறுதி ஆகியுள்ளதாகவே கருதப்படுகிறது. இச்சூழலில், டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தான் செயல்படுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா தான் கேப்டன்:

இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “ தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா டி 20 உலகக் கோப்பையிலும் கேப்டனாக செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன். இந்த தொடரில்   ரோகித் சர்மா கேப்டனாக இருப்பதால் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார். அப்படி உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் பட்சத்தில் கேப்டனாகவும் செயல்படுவார்.

அதனால் ஒருவேளை ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து குணமடைந்து வந்தாலும் அவர் கேப்டனாக இருப்பார் என்று நினைக்க வேண்டாம். இதை நான் எழுத்துப்பூர்வமாக உங்களுக்கு எழுதிக்கொடுக்கிறேன்.  நான் எதையும் கேரண்டியாக சொல்ல முடியாது. ஆனால் தற்போது அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள ரோஹித் ஷர்மா உலகக் கோப்பையில் கேப்டனாக இருக்க மாட்டார் என்று சொல்வதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவாகும்" என்று கூறியுள்ளர்.

முன்னதாக, ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கியது அணி நிர்வாகம். பின்னர், அந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். இது கடந்த காலங்களில் மும்பை அணியை திறம்பட வழிநடத்தி வந்த ரோஹித் சர்மாவின் ரசிகர்களை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி ஜெர்சியை ரசிகர்கள் தீயில் இட்டு எரித்த சம்பவம் எல்லாம் நடைபெற்றது. இச்சூழலில் ஆகாஷ் சோப்ரா டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தான் கேப்டனாக இருப்பார் என்று கூறியிருப்பது ரோஹித் சர்மாவின் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

மேலும் படிக்க: Cheteshwar Pujara: ரஞ்சி கோப்பை… இரட்டை சதம்! வெறியாட்டம் ஆடிய புஜாரா…சுப்மன் கில் இடத்துக்கு ஆப்பு!

மேலும் படிக்க: IND vs ENG Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்… முகமது ஷமியின் நிலை என்ன? விவரம் உள்ளே!

Source link