கோபி மஞ்சூரியன் பலருக்கும் மிகவும் பிடித்த டிஷ். அதே செய்முறையில் ஸ்வீட் கார்ன் மஞ்சூரியன் செய்யலாம்.

என்னென்ன தேவை?

ஸ்வீட்கார்ன் (வேகவைத்து தனியாக எடுத்தது) – இரண்டு கப்

மிளகு தூள் -2 ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

இஞ்சி, பூண்டு விழுது – சிறதளவு

பூண்டு- 5 பல்

வெங்காயம் – 2

குடை மிளகாய் – 2

சோயாசாஸ் -தேவையான அளவு

சில்லி சாஸ் -தேவையான அளவு

டெமேட்டோ சாஸ் -தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஸ்வீட்கார்ன் வேகவைத்து எடுத்துகொள்ளவும். ஒரு கப்பில் 100 கிராம் சோளமாவு, 100 கிராம்கடலைமாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவேண்டும். இதில் உங்கள் தேவைக்கு ஏற்ப உப்பை சேர்த்துகொள்ள வேண்டும். இதில் சிறிய அளவில் ஸ்வீட்கார்ன் சேர்த்து, அதில் மாவு நன்றாக ஒட்டியதும் எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி பூண்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பின் பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் நறுக்கிய குடை மிளகாயை சேர்க்க வேண்டும். தேவையான உப்பை சேர்த்து வதக்க வேண்டும். பின் டொமேட்டோ கெச் அப் 3 ஸ்பூன், சில்லி சாஸ், சோயா சாஸ் 3 ஸ்பூன் சேர்த்துகொள்ள வேண்டும். மஞ்சூரியனின் உள்ள கலவை சற்று கிரேவியாக வேண்டும் என்றால் 2 ஸ்பூன் சோளமாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து இதில் சேர்த்து கொள்ளலாம்.

சுமார் 5 நிமிடம் அடுப்பை குறைந்த தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். இதையடுத்து பொரித்து வைத்துள்ள ஸ்வீட்கார்னை சேர்த்து 2 நிமிடங்களில் வேக வைக்கவும். சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் மற்றும் மல்லி தழையை கலந்து ஒரு நிமிடம் குறைவான தீயில் வைத்து மூடி வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஸ்வீட்கார்ன் மஞ்சூரியன் தயார்.

முருங்கை கீரை சாப்பிட அவ்வளவாக பிடிக்காது என்பவர்கள் ஸ்வீட்கார்ன் முங்கை கீரை சேர்த்து புலாவ் செய்து பார்க்கலாம். முருங்கை கீரை ஒரு சூப்பர்ஃபுட் என்பது நாம் அறிந்ததே. வாரத்தில் இரண்டு நாள் முருங்கை கீரை சாப்பிடலாம்.

முருங்கை கீரை ஸ்வீட்கார்ன் புலாவ்

என்னென்ன தேவை?

அரிசி – ஒரு கப்

வெங்காயம் – 2

ஸ்வீட்கார்ன் – ஒரு கப்

முருங்கை கீரை – ஒரு கப்

தேங்காய் பால் – ஒரு கப்

பச்சை மிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு

சீரகம் – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி – கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு

எண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

பிரியாணி இலை, பட்டை, கிராம்பு – 1

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு எல்லாம் சேர்த்து அதோடு சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். பொன்னிறமாக வெங்காயம் மாறியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு சேர்க்கவும்.

இதோடு, ஸ்வீட்கார்ன், ஆய்ந்த முருங்கைக் கீரை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையெனில் மிளகாய் பொடி சேர்க்கலாம். பின், அரிசி, தேங்காய் பால், அரிசிக்கு தேவையான தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும். ஸ்வீட்கார்ன் முருங்கை கீரை புலாவ் ரெடி. இதை செய்ய இன்னொரு முறையும் இருக்கிறது. தேங்காய் பால் சேர்க்காமல் செய்யலாம். வேக வைத்த சாதத்தோடு, தேவையான பொருட்களை வதக்கி அதோடு கலந்து விடலாம்.