<p>பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறைத் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்க செயலாளர் அளித்த வழக்கில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p>
<p>அபராதத் தொகை 15 ஆயிரம் ரூபாயை அவர் செலுத்திய நிலையில், மேல் முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. </p>
<p>2018-ல் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறை எஸ்.வி.சேகர் பகிர்ந்த நிலையில், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p>