Sundar Pichai: "இந்தாண்டும் பணிநீக்கம் தொடரும்" கூகுள் பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த சுந்தர் பிச்சை!

பணிநீக்கம்:

உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.

குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. 2024ஆம் ஆண்டில் பணிநீக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்கும் என்று நினைத்தால், ஆரம்பமான சில நாட்களிலேயே நிறுவனங்கள் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தொடங்கிவிட்டன. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 7,500 ஆயிரம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த சுந்தர் பிச்சை:

இந்த நிலையில், அனைத்து பணியாளர்களுக்கு கூகுள் நிறுவனத்தில் சிஇஓ சுந்தர் பிச்சை குறிப்பு ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில்,  ”நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் பணீநீக்க நடவடிக்கையை தொடங்க கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்த பணி நீக்கம் கடந்த ஆண்டு இருந்தது போன்ற அளவில் இருக்காது. அதேபோல, அனைத்து குழுக்களிலும் பணிநீக்க நடவடிக்கை இருக்காது. கூகுளின் Alphabet நிறுவனம் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு நிறுவனம் வளர்ச்சி பாதையில் இருக்கிறது.

பணிநீக்கம் தொடரும்:

நம் சில நேரத்தில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எங்களது லட்சியங்கள் பெரியது. முன்னுரிமைகளும் அதிகம். முதலீட்டை  பெருக்க கடினமான முடிவுகளை எடுத்து தான் ஆக வேண்டும். எனவே, 2024-ல் பணிநீக்கங்கள் இருக்கும்” என்றார் சுந்தர் பிச்சை.

கூகுள் அசிஸ்டண்ட் பிரிவில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட சில நாட்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கையில் கூகுள் நெஸ்ட், பிட்பிட், விளம்பர விற்பனை பிரிவு போன்றவை அதிகமாக பாதிக்கப்பட்டது.

ஏஐ தொழில்நுட்ப போட்டியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நேரடியாக மோதும் வகையில், கூகுள்,  அமேசான் நிறுவனங்கள் ஏஐ துறையில் அதிக முதலீடுகளை செய்து வருகின்றன. இதனால், ஊழியர்களை மறுசீரமைக்கும் நோக்கில் பணிநீக்க நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

PM Modi: மேகாலயாவின் மோடியாக மாறிய சில்மே மராக்! யார் இவர்? பிரதமரே புகழ்ந்து தள்ளிய பெண்மணி!

Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்- முக்கிய முகங்கள் இவர்கள்தான்!

Source link