சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜனவரி 9 ) எபிசோடில் கதிரிடம் உருகி உருகி பேசி மயக்குகிறார் குணசேகரன். அவருக்கும் மேல் ஜான்சி ராணி “உன்னை போல ஒரு அண்ணன் எனக்கு இல்லையே. உன்னை தம்பிகள் மதிக்கவே இல்லை என்றாலும் அவர்கள் மீது உயிரையே வைத்து இருக்கியே” என பயங்கரமாக டிராமா போடுகிறாள்.
கரிகாலனுக்கு கல்யாணம் நடக்குமா?
அடுத்த நாள் காலை குணசேகரன் வீட்டுக்கு விசாலாட்சி அம்மாவின் தம்பி சாமியாடி வருகிறார். அவரிடம் எலெக்ஷனில் யார் ஜெயிப்பார்கள் என சொல்ல சொல்கிறார் குணசேகரன். அவரும் சாமியாடி எனக்கு மதுரை வீரன் பதில் சொல்லிவிட்டான் அதை யாரிடமும் சொல்ல கூடாது என்றும் சொல்லிவிட்டான் என சொல்கிறார்.
கரிகாலன் அவரிடம் எனக்கும் தர்ஷினிக்கும் கல்யாணம் நடக்குமா? என கேட்க கோபமான ஈஸ்வரி “இதை பத்தி இனிமேல் பேசக்கூடாது என எத்தனை தடவை சொல்றது?” என மிரட்ட சாமியாடி சொல்கிறார் “உனக்கு கல்யாணமே நடக்காது. இதை எந்த சாமியும் வந்து சொல்ல வேண்டியதில்லை. நானே சொல்கிறேன்” என சொல்ல கடுப்பாகிறான் கரிகாலன்.
தர்ஷினியிடம் இன்னும் எத்தனை நாளில் பரீட்சை இருக்கு என கேட்டு தெரிந்து கொள்கிறார். பரீட்சை முடிந்ததும் உனக்கும் கரிகாலனுக்கு கல்யாணம் என சொல்லி தர்ஷினிக்கு ஷாக் கொடுக்கிறார் குணசேகரன். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஜனனியின் அம்மாவிடம் இருந்து நாச்சியப்பனை பிரிப்பதற்காக குணசேகரன் வீட்டுக்கு வருகிறார்கள் உமையாள் மற்றும் நாச்சியப்பனின் ஆத்தா. அவர்களை பார்த்து ஜனனி கடுப்பாக அவர்களை நடுவீட்டில் உட்கார வைத்து உபசரணை செய்கிறார் குணசேகரன்.
“இத்தோட நிறுத்திக்கோங்க” என ஆவேசப்பட்டு ஜனனி அவர்களை வீட்டை விட்டு வெளியில் போக சொல்ல “இது என்னோட வீடு, பார்க்க நாலு பேர் வரத்தான் செய்வாங்க” என குணசேகரன் ஜனனியை அவமானப்படுத்துகிறார். ஜனனிக்கு ஆதரவாக சக்தி பேச “இந்த வீட்ல பிறந்த பிள்ளை என்பதற்காக, இந்த வீட்ல எல்லா உரிமையும் உனக்கு இருக்குன்னு துள்ளாத நீ” என சக்தியை பார்த்து குணசேகரன் சொல்ல “அப்பத்தாவோட சில முடிவுகள் இன்னும் இந்த வீட்ல இருக்கு. அதை வைச்சு தான் நான் பேசிகிட்டு இருக்கேன்” என சக்தி சரியான பதிலடி கொடுக்க அனைவரும் சக்தியை பார்த்து முறைக்கிறார்கள்.
“உங்க வீட்ல இருக்க இந்த பார்வதி எங்களோட குலதெய்வ கோயிலுக்கு வந்து, சத்தியம் பண்ணி தாலியை அங்கேயே வைச்சு கழட்டி கொடுத்திடனும்” என நாச்சியப்பனின் சகோதரி உமையாள் சொல்ல அனைவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.