SRH vs MI: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் மோதலில் முறியடிக்கப்பட்ட சாதனைகளின் பட்டியல் இதோ!

ஐபிஎல் 2024 நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதலே சிக்ஸரும், பவுண்டரியாகவே பறந்தது.

The moment when @SunRisers created HISTORY!

Final over flourish ft. Heinrich Klaasen 🔥

Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE#TATAIPL | #SRHvMI pic.twitter.com/QVERNlftkb

— IndianPremierLeague (@IPL) March 27, 2024

ஸ்டேடியத்தில் உட்கார்ந்திருந்த ரசிகர்களின் கண்கள் சிக்ஸர்களின் எண்ணிக்கையை பொறுத்து மேல் நோக்கியே இருந்தது. 263 என்ற ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடித்திருந்த அதிகபட்ச ஸ்கோரை நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முறியடித்து ஐபிஎல்லில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

𝐈𝐏𝐋 𝐇𝐈𝐒𝐓𝐎𝐑𝐘 𝐌𝐀𝐃𝐄 🌟#PlayWithFire #SRHvMI pic.twitter.com/FIy22B7Ftm

— SunRisers Hyderabad (@SunRisers) March 27, 2024

இந்தநிலையில், ஹைதராபாத் – மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் முறியடிக்கப்பட்ட அனைத்து சாதனைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ஐபிஎல்லில் அதிகபட்ச ஸ்கோர் – 277

டி20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர்.

பிபிஎல், ஐபிஎல் உள்ளிட்ட லீக் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் படைப்பு

ஐபிஎல்லில் சர்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர்.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் – 38 சிக்ஸர்கள்.

அனைத்து டி20 வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் – 38 சிக்ஸர்கள்

ஐபிஎல்லின் ஒரு போட்டியில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் – 523 ரன்கள்.

அனைத்து டி20 வரலாற்றில் ஒரு போட்டியில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் – 523 ரன்கள்

ஐபிஎல்: ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியின் பட்டியலில் இரண்டாவது இடம் – மும்பை (20 சிக்ஸர்கள்)

ஐபிஎல்: ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியின் பட்டியலில் மூன்றாவது இடம் – ஹைதராபாத் (18 சிக்ஸர்கள்)

ஐபிஎல்: ஒரு இன்னிங்ஸில் அதிவேக 250 ரன்கள் – ஹைதராபாத்

ஐபிஎல்: ஒரு இன்னிங்ஸில் அதிவேகமாக 200 ரன்கள் அடித்த இரண்டாவது அணி – ஹைதராபாத் (14.4 ஓவர்கள்)

10 ஓவர்கள் முடிவில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் – ஹைதராபாத் (148 ரன்கள்)

அறிமுக வீரரின் மோசமான சாதனை – குவேனா மபாகா ( 0/66)

ஒரு இன்னிங்ஸில் மும்பை பந்துவீச்சாளர் ஒருவர் விட்டுக்கொடுத்த அதிக ரன்கள் – குவேனா மபாகா ( 0/66)

ஐபிஎல்: ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் விட்டுகொடுத்த மூன்றாவது பந்துவீச்சாளர் – குவேனா மபாகா ( 0/66)

ஹைதராபாத் அணிக்காக அதிவேக அரைசதம் – அபிஷேக் சர்மா (16 பந்துகள்)

ஹைதராபாத் அணிக்காக அதிவேக அரைசதம்  அடித்த இரண்டாவது வீரர் – டிராவிஸ் ஹெட் (18 பந்துகள்)

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த நான்காவது வீரர் – அபிஷேக் சர்மா (16 பந்துகள்)

மும்பை இந்தியன்ஸ் அணி 246 ரன்கள் குவித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 2வது இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது.

Source link