Ayodhya Special Train: தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தி கோயில்:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார்.
இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, அந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.
இதனால், அயோத்தி நகரம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக உத்தரபிரதேச காவல்துறை, 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. ஜனவரி 22ம் தேதியன்று பாதுகாப்பை உறுதிசெய்ய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த உள்ளது.
200க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்:
முதல் நாள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாது. ஜனவரி 23ஆம் தேதி முதல் மக்கள் தரிசனம் செய்து கொள்ளலாம். இதனால், பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் அயோத்தி கோயிலுக்கு படையெடுக்க தொடங்குவார்கள்.
இதனால், பல்வேறு நகரங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்க உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை, நாக்பூர், புனே, வார்தா, கோவா, கோட்டயம், டேராடூன், ஹைதராபாத், செகந்திராபாத், ஜம்மு காஷ்மீர், கத்ரா, உத்னா, இந்தூர், பலன்பூர், சலர்பூர், போபால், ஜபல்பூர், அசாம், குவஹாத்தி, நாசி, ஜால்சனா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை பொறுத்தவரை அயோத்திக்கு செல்லவும், மீண்டும் சொந்த ஊர் திரும்பவும் சேர்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 22ஆம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Ayodhya Ram Mandir: நாடே எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா..! ஜனவரி 22ல் நடக்கப்போவது என்ன?
Ayodhya Ram Mandir Guests: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு; யாருக்கெல்லாம் அழைப்பு? கலைநிகழ்ச்சிகள், நேரலையை எங்கு காணலாம்?