Special Train: விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. கோவை, கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்..

சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக தென்னக ரயில்வே மூலம் கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாளான சனி, ஞாயிறு  கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிக அளவில் இருக்கும். இத்தகைய நாட்களில்  வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்றால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில்  பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இத்தகைய நாட்களில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளும் தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தென்னக ரயில்வே தரப்பிலும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். அதன்படி தற்போது, ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26ல் குடியரசு தினம், ஜனவரி 27 சனிக்கிழமை, ஜனவரி 28 ஞாயிற்று கிழமை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊருக்கு படை எடுத்துள்ளனர்.

தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு 25 ஆம் தேதியே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படை எடுத்தனர். இதனையடுத்து நாளையுடன் 4 நாள் விடுமுறை முடிவுக்கு வரும் நிலையில் மக்கள் சென்னை திரும்புவார்கள். இதற்காக தென்னக ரயில்வே கோவை மற்றும் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான சிறப்பு ரயில், வண்டி எண்: 06041 நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். அதேபோல் 29 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06042) 30 ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். இந்த ரயில் நாகர்கோவில், வல்லியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட வழித்தடம் மூலம் செல்லும்.

அதேபோல் கோவையில் இருந்து சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோயம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 28 ஆம் தேதி (வண்டி எண்: 06043) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் 29 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைகிறது. 29 ஆம் தேதி மதியம் மதியம் 1.45 மணிக்கு (வண்டி எண்: 06044) புறப்பட்டு அன்று இரவு 11.05 மணிக்கு கோவை சென்றடைகிறது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்ப்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும்.

Source link