South Indian Film Workers’ Association has strongly condemned former ADMK executive AV Raju’s speech on actress Trisha | திரிஷா குறித்து அவதூறு பேச்சு


சேலம் மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் ஏ.வி.ராஜூ. இவர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கூவத்தூரில் அதிமு  எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து நேற்று செய்தியாளர்கள் முன்பு பேசியது தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பேசிய அவர், கூவத்தூரில்  தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களையும், திரிஷா உள்ளிட்ட நடிகைகளையும் தொடர்புபடுத்தி பேசினார். தற்போது இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. 
இந்தநிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவின் நடிகை திரிஷா குறித்த பேச்சுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதில், ”இன்றைய சமூக வளைதளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட A.V.ராஜி என்பவர் திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அவதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸ் அவர்களையும் சம்மந்தப்படுத்தி இந்த கீழ்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை, கீழ்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இத்தகைய அநாகரிகமான கீழ்தரமான செயலை,தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம்.
பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக திருமதி.முர்மு அவர்கள் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் “பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்” நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்பு கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்களுக்கு பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.” என குறிப்பிட்டு இருந்தது. 

மேலும் காண

Source link