Silambarasan 48 Movie Shooting To Begin Soon Simbu To Act In Dual Roles

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 48வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிலம்பரசன்
 நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் சிம்பு மீண்டும் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாநாடு படம் அவருக்கு ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்த வெந்து தணிந்தது காடு படம்  நல்ல வெற்றி பெற்றது. தற்போது சிம்பு அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களில்  நடிக்க தயாராக இருக்கிறார். இந்த வரிசையில் அடுத்தபடியாக  அவர் நடிக்க இருக்கும் படம் எஸ்.டி.ஆர் 48.
எஸ்.டி ஆர் 48
சிம்புவின் 48 ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சிலம்பரசன் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் தற்போது இந்தப் படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று  வருகின்றன. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் செட் அமைக்கப் பட்டு எடுக்கப்பட இருப்பதாகவும் பெரிய அளவிலான வி.எஃப். எக்ஸ் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. படபிடிப்புக்கு முன்னதாக நடிகர் சிம்பு வெளி நாட்டில் இருந்து சென்னை திரும்பிவிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

#STR48 – Shoot Begins from Feb end and Set works to begin from Jan end..💥 90% of the film is said to be filmed in grand indoor sets..⭐• With the Help of the Storyboard and VFX team’s advice, each set will be designed..🔥• #SilambarasanTR is expected to arrive in Chennai…
— Laxmi Kanth (@iammoviebuff007) January 20, 2024

எஸ்.டி.ஆர் 48 படத்தைத் தொடர்ந்து சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். கெளதம் மேனன் இயக்க ஐஷரி கணேஷ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். மேலும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு மேலும் ஒரு படம் நடித்து தருவதாக தெரிவித்துள்ளார் என்று தயாரிப்பாளர் ஐஷரி கனேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : Vidamuyarchi – Goat : அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும் அஜித் விஜய் படங்கள்.. படைபலத்தை காட்ட காத்திருக்கும் ரசிகர்கள்
Siragadikka Aasai :வேண்டா வெறுப்பாக மீனாவுக்கு ஊட்டி விடும் விஜயா… வெளுத்து வாங்கும் பாட்டி- சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Source link